DCW தொழிற்சாலையை மூடக் கோரி காயல்பட்டினத்தில் நடைபெற்ற கருப்புக்கொடி - மனித சங்கிலி போராட்டம் மற்றும் விளக்கப் பொதுக்கூட்டத்தில் நகரின் அனைத்துப் பகுதி பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். விளக்கப் பொதுக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களான - பூவுலகின் நண்பர்கள் குழுமத்தைச் சேர்ந்த ஜி.சுந்தராஜன், பேராசிரியை பாத்திமா பாபு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு, விழிப்புணர்வூட்டும் அரிய தகவல்களை உள்ளடக்கி உரையாற்றினர்.
ஜி.சுந்தராஜன் அறிமுகம்:
ஜி.சுந்தராஜன் - சுற்றுச்சூழல் பாதுகாப்பு உலகில் புகழ்பெற்றவர். 41 வயது நிரம்பிய இவர், BE (ELECTRONICS AND INSTRUMENTATION) பட்டம் பயின்றவர். 18 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். சமூகப் போராளி.
Hn5 என்ற குழும நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர் மற்றும் இயக்குனரான இவரை, முழு நேர சுற்றுச்சூழல் ஆர்வலர், பகுதி நேர கணினி நிபுணர் எனக்கூறுவதும் உண்டு.
தமிழகத்தில் அண்மைக் காலங்களில் நடைபெற்றுள்ள பல சுற்றுச்சூழலை மையமாக கொண்ட போராட்டங்களில் முன்னணி வகித்தவர்.
கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பவர். அதற்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கில் இவரும் ஒரு மனுதாரர். People’s movement against Nuclear Energy (PMANE) அமைப்பின் ஆதரவு குழுவின் உறுப்பினர்.
அணு மின் நிலையங்களுக்கு எதிராக பல ஊடகங்களில் தனது வலிமையான கருத்துகளை எடுத்து வைத்து வருபவர்.
இயற்கை உணவு ஆர்வலர். மரபணுவை மூலமாக கொண்ட கத்திரிக்காய் (Bt Brinjal) உற்பத்திக்கு SAFE FOOD ALLIANCE மூலம் எதிரிப்பு தெரிவித்தவர்.
25 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு குரல் கொடுத்து வரும் பூவுலகின் நண்பர்கள் குழுமத்தின் முக்கிய உறுப்பினர்.
இரு மாதங்களுக்கு ஒரு முறை வெளிவரும் பூவுலகு பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவின் அங்கம்.
அவரது உரையின் அசைபடப்பதிவை நேரடியாகக் காண கீழ்க்காணும் படத்தின் மீது சொடுக்குக!
பேராசிரியை பாத்திமா பாபு அறிமுகம்:
தூத்துக்குடியை சார்ந்த பேராசிரியை பாத்திமா பாபு, ஓய்வுபெற்ற ஆங்கில இலக்கிய பேராசிரியை. கல்வித்துறையில் 34 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர். நாடறிந்த சுற்றுச்சூழல் போராளி.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியளவில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகள் ஏற்படுத்திய STERLITE தொழிற்சாலைக்கு எதிராக பல ஆண்டுகளாகப் போராடி வருபவர்.
ஊடகங்களாலும், பாமர மக்களாலும் வீராங்கனை என அழைக்கப்படும் இவர், சுற்றுச்சூழல், சமூக நீதி, மத நல்லிணக்கம் என பல சமூக அம்சங்களிலும் வலிமையாகக் குரல் கொடுத்து வருபவர்.
அளவக்கரை, ஞானதூதன், நெய்தல் முகம் போன்ற பல முற்போக்கு ஊடகங்களின் ஆசிரியர் குழுவில் இருந்தவர் இவர்.
பல அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகளின் முக்கிய பொறுப்புகளிலும் இவர் உள்ளார்.
2001ஆம் ஆண்டு, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், சிறந்த பொது சேவைக்காக இவருக்கு குடியரசு நாள் விருது வழங்கியுள்ளது.
2009ஆம் ஆண்டு போபால் நகரில் நடந்த, போபால் விஷ வாயுக் கசிவு விபத்தின் 25ஆம் ஆண்டு நினைவு நிகழ்ச்சியில், கவுரவிக்கப்பட்ட 25 சுற்றுச்சூழல் ஆர்வலர்களில் இவரும் ஒருவர்
2013ஆம் ஆண்டில் தங்கப் பெண்மணி என்ற விருதினை ‘நீயா, நானா’ நிகழ்ச்சி இவருக்கு வழங்கியது.
GREENPEACE INTERNATIONAL அமைப்பு - சுற்றுச்சூழலை பாதுகாக்க இவரின் தொடர் முயற்சிக்காக விருதை வழங்கியுள்ளது
இவை தவிர, INTERNATIONAL WOMEN’S DAY OUTSTANDING WOMAN AWARD போன்ற விருதுகளையும் இவர் வென்றுள்ளார்.
சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு வேகமாக இரையாகி வரும் தூத்துக்குடி மாவட்டத்தின் - தெளிவான எதிர்ப்புக் குரலாகத் திகழ்ந்து வருபவர் பேராசிரியை பாத்திமா பாபு.
அவரது உரையின் அசைபடப்பதிவை நேரடியாகக் காண கீழ்க்காணும் படத்தின் மீது சொடுக்குக!
மனித சங்கிலி போராட்டத்தின் அனைத்து நிகழ்வுகளையும் தாங்கிய அசைபடப்பதிவை முழுமையாகக் காண கீழ்க்காணும் படத்தின் மீது சொடுக்குக!
விளக்கப் பொதுக்கூட்டத்தின் அனைத்து நிகழ்வுகளையும் தாங்கிய அசைபடப்பதிவை முழுமையாகக் காண கீழ்க்காணும் படத்தின் மீது சொடுக்குக!
காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |