காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் தலைவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை முன்னாள் தலைவர் மற்றும் நடப்பு கவுரவ தலைவரும், காயல்பட்டினம் நாட்டாண்மை முஸ்லிம் முத்துச்சாவடி பொருளாளரும், நெல்லை முஸ்லிம் அநாதை நிலையத்தின் (MOC) முன்னாள் துணைத்தலைவரும், ‘மரைக்கார் இன்டஸ்ட்ரீஸ்’ எனும் பெயரில் - கோல்கத்தா, சென்னை, தூத்துக்குடி நகரங்களில் தொழிற்சாலை நடத்தி – பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கியவருமான - காயல்பட்டினம் சதுக்கைத் தெருவைச் சேர்ந்த தொழிலதிபர் ஹாஜி எம்.எஸ்.எம்.முஹம்மத் பாஜுல் அஸ்ஹப் என்ற பாஜுல் அஸ்ஹப் ஹாஜியார், இம்மாதம் 16ஆம் நாளன்று 15.00 மணியளவில் காலமானார்.
அன்னாரின் மறைவை முன்னிட்டு, மேற்கு வங்க மாநிலம் கோல்கத்தா நகரில் வசிக்கும் காயலர்கள் பங்கேற்பில், இரங்கல் நிகழ்ச்சி, கோல்கத்தா மரைக்கா இன்டஸ்ட்ரீஸ் நிறுவன வளாகத்தில் நடைபெற்றது.
காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் அஹ்ஸனீ ஃபாழில் பாக்கவீ தலைமையில் கத்முல் குர்ஆன் ஓதி தமாம் செய்யப்பட்டு, மர்ஹூம் அவர்களின் பெயரில் ஈஸால் தவாப் செய்யப்பட்டது. பின்னர் மர்ஹூம் அவர்களின் மண்ணறை - மறுமை நல்வாழ்விற்காக பிரார்த்தனை செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், நாகூர் கானுவாப்பா ஸாஹிப், கோல்கத்தா சாந்த்னி மஸ்ஜித் இமாம் ஜாவித் அக்தர் ஸாஹிப் ஆகியோருடன், சுமார் 150 காயலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
தகவல்:
கோல்கத்தாவிலிருந்து...
ஷெய்க் அப்துல் காதிர் ஸூஃபீ மூலமாக
M.S.M.பாஜுல் அஸ்ஹப்
படங்கள்:
M.N.பாஜுல் அஸ்ஹப் |