வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் நடத்தும் - ப்ளாஸம் கோப்பைக்கான 6ஆம் ஆண்டு காயல் ப்ரீமியர் லீக் கால்பந்து சுற்றுப்போட்டி இம்மாதம் 03ஆம் நாளன்று துவங்கி, 17ஆம் நாளன்று நிறைவுற்றது.
பிரிவுக்கு 6 அணிகள் வீதம் 12 அணிகளும் 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. போட்டிகள் அனைத்தும் காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் நடைபெற்றன.
லீக் சுற்று, காலிறுதி, அரையிறுதி என்ற அடிப்படையில் போட்டிகள் நடைபெற்று, நிறைவில் PHM அணியும், Bangkok Ball Busters இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றன. இறுதிப்போட்டி, இம்மாதம் 17ஆம் நாளன்று 17.00 மணியளவில் நடைபெற்றது.
ஆட்டம் துவங்கிய சில நிமிடங்களில் PHM அணி வீரர் அஃப்ரஸ் ஒரு கோல் அடித்தார். இரண்டாவது பாதி ஆட்டத்தில், Bangkok Ball Busters அணியின் ஹனீஃபா 2 கோல்களும், காழி அலாவுத்தீன் 1 கோலும் அடிக்கவே, நிறைவில் 3-1 என்ற கோல் கணக்கில் Bangkok Ball Busters அணி வெற்றிபெற்றது.
பரிசளிப்பு விழா நிகழ்ச்சிகளை மாணவர் ஹிஷாம் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ்வுக்கு, வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் நிறுவனர் அலீ ஃபைஸல் நினைவுப் பரிசு வழங்கினார்.
நடுவர்களுக்கான பரிசுகளை, ஐக்கிய விளையாட்டு சங்க முன்னாள் கால்பந்து வீரர் மோகன் வழங்கினார்.
போட்டித் தொடரின் சிறந்த கோல் காப்பாளராக, NewYork Rangers அணியின் ஷம்சுத்தீன், சிறந்த பின்கள வீரராக Gallery Birds அணியின் ஹஸனுல் பன்னா, சிறந்த நடுக்கள வீரராக Fi-Sky Boys அணியின் நவீத், சிறந்த முன்கள வீரராக Blossoms அணியின் அமீர், சிறந்த இளம் வீரராக Canton Thuners அணியின் ரிமாஸ், இறுதிப்போட்டியின் சிறந்த வீரராக Bangkok Ball Busters அணியின் ஹனீஃபா, தொடரின் சிறந்த வீரராக Kayal Chelsea அணியின் பி.எஸ்.ஷம்சுத்தீன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு, தமுமுக மாநில அமைப்புச் செயலாளர் ஜோஸப் நொலாஸ்கோ, மாவட்ட தலைவர் ஆஸாத், மாநில மருத்துவ அணி செயலாளர் கிழுறு முஹம்மத், மாவட்ட துணைச் செயலாளர் முஹ்ஸின் முர்ஷித், நகர தலைவர் ஜாஹிர் ஹுஸைன், மமக நகர செயலாளர் ஐதுரூஸ் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
காலிறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்ற Faams, Kayal Chelsea அணிகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை நகரப் பிரமுகர் எஸ்.ஓ.கியாது வழங்கினார். அரையிறுதிப்போட்டிக்குத் தேர்வான Blossoms, NewYork Rangers அணிகளுக்கு, தலா 3 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையையும், வீரர்களுக்கான தனிப்பரிசுளையும், இறுதிப்போட்டியில் இரண்டாமிடம் பெற்ற PHM அணிக்கு தனிநபர் பரிசுகள் மற்றும் ரூபாய் 10 ஆயிரம் தொகைக்கான காசோலை, சுழற்கோப்பை ஆகியவற்றையும் நகரப் பிரமுகர் எஸ்.ஐ.தஸ்தகீர் வழங்கினார்.
இறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற Bangkok Ball Busters அணிக்கான தனிப்பரிசுகள், ரூபாய் 15 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் சுழற்கோப்பையை, சிறப்பு விருந்தினர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் வழங்கினார்.
தகவல் & படங்கள்:
M.ஜஹாங்கீர்
வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |