ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் (AIIMS) நிறுவனம் அண்மையில் நடத்திய முதுகலை மருத்துவ (MD/MS/MCH) தேர்வில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த மருத்துவர் டாக்டர் நாஸிக் ஹஸன் இம்தியாஸ், தேர்வெழுதிய 35 ஆயிரம் மாணவர்களுள் 217ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.
டாக்டர் நாஸிக் ஹஸன் இம்தியாஸ், அபூதபீ காயல் நல மன்றத்தின் கவுரவ தலைவர் ஐ.இம்தியாஸ் அஹ்மத் - எச்.ஏ.சி.நஃபீஸா தாஹிரா தம்பதியின் மகனும், மறைந்த ஹாஜி கே.எம்.இஸ்மத், ஹாஜி ஹஸன் அப்துல் காதிர் ஆகியோரின் பேரனுமாவார்.
2007ஆம் ஆண்டு நடைபெற்ற ப்ளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் 1200க்கு 1180 மதிப்பெண்கள் பெற்றமைக்காக, தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் - இக்ராஃ கல்விச் சங்கம் இணைந்து நடத்திய “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவியரை - 2007” நிகழ்ச்சியில் பாராட்டப்பட்டார்.
தொடர்ந்து, மெரிட் தகுதியுடன் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பை நிறைவு செய்தார்.
AIIMSஇல் இடம்பெறுவது மருத்துவ மாணவர்களுக்கு மிகவும் அரிதான வாய்ப்பு என்ற நிலையில், டாக்டர் நாஸிக் ஹஸனுக்கு இடம் கிடைத்திருப்பதும், காயல்பட்டினத்திலிருந்து AIIMSஇல் இடம்பெறும் முதல் மருத்துவ மாணவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. |