Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:11:55 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13960
#KOTW13960
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஜுன் 26, 2014
காயல்பட்டினம் ஐக்கிய பேரவை - ஹாங்காங் அமைப்பிற்கு 2014-2016 பருவத்திற்கான புதிய செயற்குழு தேர்வு! 6ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்ட நிகழ்வுகள்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3449 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஹாங்காங்கில் காயலர்களை ஒருங்கினைத்து செயல்பட்டு வரும் காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் 6ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் 14-06-2014 அன்று ஹாங்காங் கவ்லூன் பள்ளி சமுதாயக் கூடத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. அக்கூட்டத்தில், 2014-2016 பருவத்திற்கான - அமைப்பின் புதிய செயற்குழு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

கூட்ட நிகழ்வுகள் குறித்து அவ்வமைப்பின் சார்பில் அதன் செயலாளர் எஸ்.எம்.ஜே.முஹம்மத் பாக்கர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

பொதுக்குழுக் கூட்டம்:

காயல்பட்டினம் ஐக்கிய பேரவை - ஹாங்காங் அமைப்பின் 6ஆம் ஆண்டு பொதுக்குழுக்கூட்டம் 14-06-2014 சனிக்கிழமையன்று மஃரிப் தொழுகைக்குப் பின் ஹாங்காங் கவ்லூன் மஸ்ஜித் சமுதாயக் கூடத்தில் நடைப்பெற்றது. கூட்டத்திற்கு ஜனாப் எஸ்.எம்.ஹஸன் மரைக்கார், ஜனாப் ஏ.எஸ்.ஜமால் முஹம்மத் மற்றும் காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் துணைத் தலைவர்களில் ஒருவரான ஜனாப் எம்.எஸ்.சதக் மீரான் ஆகியோர் தலைமை வகித்தனர். கூட்ட நுழைவாயிலில் உறுப்பினர்கள் பெயர் பதிவு செய்யப்பட்டனர்.



பி.எஸ்.ஷாஹ{ல் ஹமீத் கிராஅத் ஓதி கூட்ட நிகழ்வுகளை துவக்கி வைத்தார். அமைப்பின் செயற்குழு உறுப்பினர் எம்.செய்யித் அஹ்மத் அனைவரையும் வரவேற்று பேசியதோடு, கூட்ட நிகழ்வுகளை நெறிப்படுத்தினார்.



அதனைத் தொடர்ந்து பேரவையின் கடந்த பொதுக்குழு கூட்ட நிகழ்வுகள், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பேரவை செயலாளர் எஸ்.எம்.ஜெ.முஹம்மத் பாக்கர் பேசினார்.

ஆண்டறிக்கை:

பின்னர் பேரவையின் ஆறாம் ஆண்டறிக்கையை, பேரவைத் தலைவர் எம்.எம்.எஸ்.காழிஅலாவுதீன் தாயகத்தில் நடைபெற்ற தனது மகனின் ஹாஃபிழுல் குர்ஆன் பட்டமளிப்பு விழாவிற்கு சென்றிருந்ததால் அவரின் சார்பாக துணைத் தலைவர்களில் ஒருவரான எம்.எஸ்.சதக்கு மீரான் சமர்ப்பித்தார்.



அந்த அறிக்கையிலிருந்து சில முக்கிய அம்சங்கள்...

>>> தொழில் செய்திட திறமையிருந்தும் பொருளாதார நலிவு காரணமாக தொழில் செய்ய இயலாத நமதூர் மக்களிடமிருந்து தொழிற்கருவிகள் உதவி கோரி பெறப்பட்ட மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, விண்ணப்பதாரர்களின் உண்மை நிலை குறித்து ஆய்ந்தறியப்பட்டு, ஆகஸ்ட் 2013இலும் ஜூன் 2014இலும் மொத்தம் 60 பயனாளிகளுக்கு தொழிற்கருவிகள் வழங்கப்பட்டன.

>>> பேரவை, கத்தார் காயல் நல மன்றம், மலேஷியா காயல் நல மன்றம் மற்றும் ஷிஃபா அமைப்புகளுடன் சேர்ந்து சர்க்கரை நோய் விழிப்புணர்வு நடைப்பயணம் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனை இலவச முகாம் நிகழ்ச்சிகளை முறையே 22 மற்றும் 23 பிப்ரவரி 2014ல் நடத்தியது.

>>> நமதூர் மக்களுக்காக நல்லமுறையில் கல்வி பணியாற்றி வரும் இக்ரா கல்வி சங்கத்தி;ற்கும், மருத்துவ உதவி கூட்டமைப்பான ஷிஃபா அமைப்பிற்கும் வருடாந்திர நிர்வாகச் செலவினங்களுக்கும், ஷிஃபாவின் மருத்துவ உதவி விண்ணப்பங்களுக்கு உதவித் தொகையையும் வழங்கியது.

>>> நமது பேரவையால் செய்யப்பட்டு வரும் நகர்நலப் பணிகள், உதவித் திட்டங்களுக்கு தோள் கொடுக்கும் முகமாக, ஹாங்காங் வாழ் தாய்மார்கள் தமது மனப்பூர்வமாக அளித்து வரும் பங்களிப்பிற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

வரவு-செலவு கணக்கறிக்கை:

அதனைத் தொடர்ந்து நடப்பு பருவத்திற்கான வரவு-செலவு கணக்கறிக்கையை பேரவை பொருளாளர் எம்.எம்.எஸ்.ஷெய்க் மொகுதூம் சமர்ப்பிக்க கூட்டம் அதற்கு ஒருமனதாக ஒப்புதளித்தது.



வாழ்த்துரைகள்:



அதன் பின்னர் வாழ்த்துரைகள் இடம்பெற்றன. முதலில் தலைவர் எம்.எம்.எஸ்.காழி அலாவுதீனின் வாழ்த்துரை முன்னாள் தலைவர் எஸ்.எஸ்.அப்துல் அஜீஸினால் வாசிக்கப்பட்டது.

பின்னர் பேரவையின் செயற்குழு உறுப்பினர் அரபி ஹாஜா முஹ்யித்தீன், மூத்த ஆலோசனையாளர்கள் கம்பல்பக்ஷ் ஹாஜி எஸ்.எச்.பாக்கர் ஸாஹிப் மற்றும் ஏ.எஸ்.ஜமால் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அவர்கள் பேரவையின் செயற்பாடுகளில் ஹாங்காங், சீனா மற்றும் மக்காவ் வாழ் அனைத்து காயலர்களும் சேர்ந்து நமதூருக்கான நலப்பணிகளை செய்ய உதவுமாறு வேண்டுகோள் விடுத்தனர். பேரவையின் செயற்பாடுகளை மேலும் சிறப்பாக செய்திட பண உதவிகளை பெருவாரியாக வழங்கிடுமாறு கேட்டுக்கொண்டனர்.

ஜமால் மாமா மேலும் அவருடைய உரையில் ஹாங்காங்கில் மூன்றாம் தலைமுறை காயலர்கள் ஏற்கனவே வேலையில் இருக்கின்றனர் என்றும் அனைத்து தலைமுறையினரும் ஒற்றுமையுடன் களப்பணியாற்றிட வேண்டும் என்றும், ஹாங்காங்கில் குர்ஆன் மற்றும் மார்க்க போதிப்புகள் மற்றும் தமிழ் கற்பித்தல் திட்டத்தினை நடத்தி வரும் நமதூர் மக்களுக்கு பாராட்டுதல்களை தெரிவித்தார்.

புதிய செயற்குழு தேர்வு:

அதனைத் தொடர்ந்து ஏ.எஸ்.ஜமால் மாமா அவர்கள் பேரவையின் தேர்வுக் குழுவால் 2014-2016 இரண்டு வருட பருவத்திற்காக தேர்வு செய்யப்பட்ட செயற்குழுவினை அறிவித்து அறிமுகப்படுத்த, கூட்டத்தினர் தக்பீர் முழக்கத்துடன் அதனை ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் விபரம்:

தலைவர்:
ஜனாப். ஏ.டபிள்யு.கிழுறு முஹம்மத் ஹல்லாஜ்

துணைத் தலைவர்கள்:
ஜனாப். எம்.எம்.எஸ்.ஷெய்க் மொகுதூம்
ஜனாப். பி.எஸ்.ஷாஹுல் ஹமீத்

செயலாளர்:
எம்.செய்யித் அஹமத்

துணை செயலாளர்:
ஹெச்.எம்.எஸ்.ஹபீப் ஷக்கீல்

பொருளாளர்:
பி.எஸ்.ஏ.அஹமத் கபீர்

செயற்குழு உறுப்பினர்கள்:
1. ஹாஜா அரபி
2. தைக்கா உபைதுல்லாஹ்
3. எம்.என்.அமீர் சுல்தான்
4. எஸ்.இ.நூஹ் லெப்பை
5. டி.செய்யித் இஸ்மாஈல்

6. எஸ்.எம்.ஜெ.முஹம்மத் பாக்கர்
7. எஸ்.எம்.அப்துல் மத்தீன்
8. பிரபு எஸ்.முபாரக்
9. எம்.ஏ.கே.நூஹ் பஷீர்

தேர்வுக்குழு உறுப்பினர்கள்:
1) ஜனாப் எஸ்.எம்.ஹஸன் மரைக்கார்
2) ஜனாப் ஏ.எஸ்.ஜமால் முஹம்மத்
3) ஜனாப் எஸ்.டி. முஹம்மத் ஷாஃபி
4) ஜனாப் எஸ்.எச்.பாக்கர் ஸாஹிப்
5) ஜனாப் பி.எம்.எஸ்.முஹ்ஸின்

புதிய தலைவரின் ஏற்புரை:



புதிய தலைவர் கிழுறு முஹம்மத் ஹல்லாஜ் ஏற்புரையாற்றினார். அவரது தலைமையிலான புதியக்குழு நமதூரிலுள்ள நலிவுற்றவர்களுக்கு நற்பணிகளையாற்றிட பாடுபடும் என்றும், ஹாங்காங், சீனா, மக்காவிலுள்ள அனைவரும் பேரவையில் சேர்ந்து பேரவையின் பணிகளுக்கு உதவியளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார்.

அனைத்து காயல் நல மன்றங்களும் மற்றவர்களும் சேர்ந்து நமதூரின் கே.எம்.டி.மருத்துவமனையின் தரத்தை உயர்த்தி நமது வட்டாரத்திலுள்ள மருத்துவமனைகளில் தலைசிறந்த ஒன்றாக உயர்த்திட உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

கருத்துரை:

அதன் பின்னர் சென்னையிலிருந்து வந்திருந்த K.C.G.C. செயற்குழு உறுப்பினர் ஜனாப் பி.எம்.டி.அபூபக்கர் நல்ல கருத்துக்களை பேரவை உறுப்பினர்களுக்கு பரிமாறினார்.

இதர நிகழ்வுகள்:

பேரவையின் ஷிஃபா பிரதிநிதி எம்.செய்யத் அஹ்மத் ஷிஃபாவின் செயற்பாடுகளை பற்றிய அறிக்கையை சமர்ப்பித்தார்.

அதன் பின்னர் அவர் கே.எம்.டி.மருத்துவமனையிலிருந்து எக்கோ ஸ்கேன் கருவி வாங்குவதற்கு உதவி அளித்திட வந்திருந்த விண்ணப்பத்தை வாசித்து அதற்கு பேரவையின் உறுப்பினர்களின் பங்களிப்பிற்கு கோரிக்கை விடுக்க மாஷா அல்லாஹ் பேரவை உறுப்பினர்கள் நன்கொடைகளை அளித்தனர்.

ஹாஃபிழ் வி.எம்.டி.முஹம்மத் ஹஸன் நன்றி கூறினார். நிறைவாக கவ்லூன் மஸ்ஜித் இமாம் மவ்லவி ஹாஃபிழ் எம்.ஏ.கே.ஷுஅய்ப் நூஹ் மஹ்ழரீ அவர்களின் இறை வேண்டுதலோடு நிகழ்ச்சி நிறைவுற்றது.



கூட்டத்தில் பேரவையின் உறுப்பினர்கள் திரளாக கலந்துக் கொண்டனர். பங்கேற்ற அனைவருக்கும் இரவு சிற்றுண்டி வழங்கி உபசரிக்கப்பட்டது.










இவ்வாறு காயல்பட்டினம் ஐக்கிய பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில் அதன் செயலாளர் எஸ்.எம்.ஜே.முஹம்மத் பாக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பு தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved