காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா சபை மற்றும் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் தலைவராக இருந்த ஹாஜி எம்.எஸ்.எம்.முஹம்மத் பாஜுல் அஸ்ஹப் அவர்கள், இம்மாதம் 16ஆம் நாளன்று காலமானார்.
புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான சிறப்புக் கூட்டம், இன்று (ஜூன் 27) வெள்ளிக்கிழமை 17.00 மணியளவில், தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் திருநெல்வேலி சரக கண்காணிப்பாளர் வஜீர் அஹ்மத், ஆய்வாளர் செய்யித் வாஜித் ஆகியோர் முன்னிலையில், மஹ்ழரா வளாகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மஹ்ழரத்துல் காதிரிய்யா சபை மற்றும் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் புதிய தலைவராக ஹாஜி எஸ்.கே.இசட்.ஆப்தீன் பெயரை ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் அலீ முன்மொழிய, செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தக்பீர் முழக்கத்துடன் அதை வழிமொழிந்தனர். ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் காதிர் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
மஹ்ழராவின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹாஜி எஸ்.கே.இசட்.ஆப்தீன், காயல்பட்டினம் அஹ்மத் நெய்னார் பள்ளியின் முத்தவல்லீயாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
தகவல்:
K.M.T.சுலைமான்
மஹ்ழரா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |