“இந்தியாவில் வட்டியில்லா வங்கி அமைப்பதை நோக்கி” என்ற இலக்குடன் பயணித்து வரும், ஜன்சேவா கூட்டுறவு கடன் சங்கம் நிறுவனத்தின் காயல்பட்டினம் கிளை அலுவலக துவக்க விழா, இம்மாதம் 17ஆம் நாள் செவ்வாய்க்கிழமை 17.30 மணியளவில், 34சி, முதல் மாடி, மெயின் ரோடு, காயல்பட்டினம் என்ற முகவரியில் நடைபெற்றது.
ஜன்சேவா கூட்டுறவு கடன் சங்கம் லிமிட்டெட் - மும்பை நிறுவனத்தின் தலைவர் முனைவர் ரஹ்மத்துல்லாஹ், ஜன்சேவா காயல்பட்டினம் நகர கிளை அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.
அன்று 19.30 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில், ஜன்சேவா விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஹாஃபிழ் கே.எஸ்.முஃபீஸுர் ரஹ்மான் கிராஅத் ஓதி கூட்ட நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். ஜன்சேவா காயல்பட்டினம் நகர கிளை தலைவர் வாவு எஸ்.காதிர் ஸாஹிப் வரவேற்புரையாற்றினார்.
ஜன்சேவா கூட்டுறவு கடன் சங்கம் லிமிட்டெட் - மும்பை நிறுவனத்தின் தலைவர் முனைவர் ரஹ்மத்துல்லாஹ் துவக்கவுரையாற்றினார். ஜன்சேவா கூட்டுறவு கடன் சங்கத்தின் செயல்திட்டங்களை விளக்கி அவர் பேசினார்.
ஜன்சேவா காயல்பட்டினம் கிளை நிர்வாகக் குழு உறுப்பினர்களான எல்.கே.கே.லெப்பைத்தம்பி, எஸ்.இப்னு ஸஊத் ஆகியோர் கருத்துரையாற்றினர். ப்ரொஃபஷனல் கூரியர் மீரான் வாழ்த்துரையாற்றினார்.
திறப்பு விழா மற்றும் விளக்கப் பொதுக்கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்ட வேலூர் நாடாளுமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான், இராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
ஜன்சேவா வாணியம்பாடி கிளை தலைவர் வி.அத்தீக்குர்ரஹ்மான், காயல்பட்டினம் நகர கிளை நிர்வாகக் குழு உறுப்பினர் எஸ்.இம்தியாஸ் அஹ்மத் ஆகியோர், ஜன்சேவா செயல்திட்டங்கள் குறித்த பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர்.
ஜன்சேவா காயல்பட்டினம் கிளை செயலாளர் ஏ.ஆர்.முஹம்மத் இக்பால் நன்றி கூறினார். திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
அனைத்து நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளையும், ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ ஒருங்கிணைப்பில், ஜன்சேவா காயல்பட்டினம் கிளை நிர்வாகிகள் மற்றும் அங்கத்தினர் செய்திருந்தனர்.
தகவல் & படங்கள்:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ
ஜன்சேவா குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |