ஹிஜ்ரி கமிட்டி காயல்பட்டினம் நகர கிளை சார்பில் - ரமழான் விளக்கப் பொதுக்கூட்டம், இம்மாதம் 21ஆம் நாளன்று 19.00 மணிக்கு, காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடைபெற்றது.
அப்துல் ஜலீல் தலைமை தாங்க, எஸ்.ஐ.அபூபக்கர் முன்னிலை வகிக்க, ஹாஃபிழ் கே.எஸ்.முஃபீஸுர்ரஹ்மான் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். முதல் அமர்வில் “சர்வதேச பிறை - ஓர் உண்மை விளக்கம்” எனும் தலைப்பில் மவ்லவீ அப்துர்ரஷீத் ஸலஃபீ உரையாற்றினார்.
இஷா தொழுகையைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது அமர்வில், “ஹிஜ்ரீ கமிட்டி சொல்வதென்ன?” எனும் தலைப்பில் ஏ.எம்.ஜி.மஸ்ஊத் உரையாற்றினார்.
எம்.என்.அஹ்மத் ஸாஹிப் நன்றியுரையாற்றினார். இம்மாதம் 28ஆம் நாள் சனிக்கிழமையன்று ரமழான் முதல் நாள் என அவர் அறிவிப்புச் செய்தார். கஃப்பாரா துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
கூட்ட ஏற்பாடுகளை, ஹிஜ்ரா கமிட்டி காயல்பட்டினம் கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
படங்கள்:
M.N.அஹ்மத் ஸாஹிப்
ஹிஜ்ரி கமிட்டி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |