| |
செய்தி எண் (ID #) 13995 | | | செவ்வாய், ஜுலை 1, 2014 | செப்டம்பர் 2013, டிசம்பர் 2013 வரையிலான காலாண்டிற்கு, பத்திர பதிவு வகை மூலம் - காயல்பட்டினம் நகராட்சிக்கு 7,35,367 ரூபாய் அனுப்பப்பட்டது! | செய்தி: காயல்பட்டணம்.காம் இந்த பக்கம் 2470 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய | |
தமிழகத்தில் உள்ள பத்திர பதிவு அலுவலகங்களில் வசூல் செய்யப்படும் பதிவு கட்டணங்களில் (STAMP DUTY) ஒரு பங்கு - உள்ளாட்சி மன்றங்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் காயல்பட்டினம் நகராட்சிக்கு - செப்டம்பர் 2013, டிசம்பர் 2013 வரையிலான காலாண்டிற்கு - 7,35,367 ரூபாய், நகராட்சி நிர்வாகத்துறை மூலம் - தமிழக அரசு வழங்கியுள்ளது.
இந்த தொகை - காயல்பட்டினம் நகராட்சியின் State Bank of India வங்கி தூத்துக்குடி கிளை கணக்கிற்கு (எண் 10852663985) அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவினை - நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் சந்திரகாந்த் பி. காம்ப்ளே IAS - ஜூன் 5 அன்று வெளியிட்டார்.
பத்திர மதிப்பில் 2% (Transfer Duty) - கூடுதல் தொகையாக (Surcharge) தமிழகம் முழுவதும் வசூல் செய்யப்படுகிறது. அதில் 50% தொகை உள்ளாட்சி மன்றங்களுக்கும், 50% தொகை - TAMILNADU URBAN ROAD INFRASTRUCTURE FUND (TURIF) - வகைக்கும் ஒதுக்கப்படுகிறது.
அக்டோபர் 2011 - டிசம்பர் 2011 காலகட்டத்திற்கான தொகை அனுப்பப்பட்ட செய்தி ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
ஜனவரி 2012 - மார்ச் 2012 காலகட்டத்திற்கான தொகை அனுப்பப்பட்ட செய்தி ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 2012 - ஜூன் 2012 காலகட்டத்திற்கான தொகை அனுப்பப்பட்ட செய்தி ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
ஜூலை 2012 - செப்டம்பர் 2012 காலகட்டத்திற்கான தொகை அனுப்பப்பட்ட செய்தி ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
அக்டோபர் 2012 - டிசம்பர் 2012 காலகட்டத்திற்கான தொகை அனுப்பப்பட்ட செய்தி ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
ஜனவரி 2013 - மார்ச் 2013 காலகட்டத்திற்கான தொகை அனுப்பப்பட்ட செய்தி ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 2013 - ஜூன் 2013 காலகட்டத்திற்கான தொகை அனுப்பப்பட்ட செய்தி ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
|
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|
|