அண்மையில் - இலங்கை தலைநகர் கொழும்பு நகரின் புறநகர் பகுதிகளான பேருவளை, அளுத்கம ஆகிய
இடங்களில் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இலங்கை காயல் நல
மன்றம் காவாலங்கா சார்பாக - ரூபாய் 1,70,000 மதிப்பிலான பால் மாவு உதவியாக
அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் - பிற வெளிநாட்டு காயல் நல மன்றங்களோ அல்லது தனி நபர்களோ அம்மக்களுக்கு ஏதாவது ஒரு
வகையில் உதவி செய்ய விரும்பினால், இலங்கையில் ஹாஜி ரபீக் புஹாரியை (+94 77 751 5253) தொடர்பு
கொள்ளலாம் என தற்போது சென்னை வந்துள்ள காவாலங்கா தலைவர் ஹாஜி M.S. ஷாஜஹான் -
காயல்பட்டணம்.காம் இணையதளத்திடம் தெரிவித்தார்.
|