காயல்பட்டினம் பைத்துல்மால் வாராந்திர கூட்டங்களில், கடனுதவியாக 4 லட்சத்து 9 ஆயிரம் ரூபாயும், ஜகாத் நிதியுதவியாக 30 ஆயிரம் ரூபாயும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளையின் சார்பில், வாராந்திர கடனுதவி, ஜகாத் நிதியுதவி வழங்குவதற்கான சிறப்புக் கூட்டம் 21.06.2014 சனிக்கிழமை 19.30 மணிக்கு, பைத்துல்மால் அலுவலகத்தில் நடைபெற்றது.
அமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில், உதவிகள் கோரி பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, விண்ணப்பதாரர்கள் நேரில் அழைத்து விசாரிக்கப்பட்டு, தகுதியான பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அவர்களுள் 4 பேருக்கு மாதக் கடனுதவியாக ரூபாய் 1 லட்சத்து 75 ஆயிரம் தொகையும். 3 பேருக்கு ஜகாத் உதவியாக ரூபாய் 13 ஆயிரம் தொகையும் வழங்கப்பட்டது.
இம்மாதம் 28.06.2014 சனிக்கிழமை 19.30 மணியளவில் நடைபெற்ற கூட்டத்தில், விண்ணப்பதாரர்கள் நேரில் அழைத்து விசாரிக்கப்பட்டு, தகுதியானோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
7 பேருககு மாதக் கடனுதவியாக 2 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் தொகையும், 5 பேருக்கு ஜகாத் நிதியுதவியாக 17 ஆயிரம் ரூபாய் தொகையும் வழங்கப்பட்டது.
இவ்விரு கூட்டங்களிலும், காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை நிர்வாகிகளான வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், டூட்டி சுஹ்ரவர்த்தி, எம்.ஏ.எஸ்.அபூதாஹிர், நெய்னா முஹம்மத், அஹ்மத் சுலைமான் ஆகியோர் கலந்துகொண்டனர்.
காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |