காயல்பட்டினம் ஹாஃபிழ் அமீர் வலிய்யுல்லாஹ் பள்ளியில் ஆண்டுதோறும் ரமழான் மாதத்தில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில், நேற்று (ஜூலை 02) பதிவு செய்யப்பட்ட இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள் வருமாறு:-
இஃப்தார் நிகழ்ச்சியில் நாள்தோறும் 30 முதல் 50 பேர் வரை கலந்துகொள்கின்றனர். அவர்களுக்கு, பேரீத்தம்பழம், தண்ணீர், கஞ்சி, வடை உள்ளிட்டவை பரிமாறப்படுகிறது. வெண்கஞ்சி அரிதாகிப் போன இக்காலகட்டத்திலும், இப்பள்ளியில் வெண்கஞ்சியும், கறிகஞ்சியும் மாற்றி மாற்றி தயாரிக்கப்படுகிறது.
இப்பள்ளியில், காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர்களான மவ்லவீ ஏ.அபுல் ஹஸன் ஷாதுலீ ஃபாஸீ இமாமாவும், ஜியாத் முஅத்தினாகவும் பணியாற்றி வருகின்றனர். முஅத்தின் ஜியாத், 4 மாதங்களுக்கு முன் இப்பள்ளியில் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பள்ளியின் முஅத்தினாகப் பணியாற்றி வரும் - படுக்கப்பத்து ஊரைச் சேர்ந்த அப்துஸ்ஸமத் என்பவர், வயது முதிர்வு காரணமாக தொடர்ந்து பணியாற்றிட இயலா நிலை. அவரது நிலையை அறிந்த பள்ளி நிர்வாகம், அவர் விரும்பும் வரை இப்பள்ளியிலேயே ஊதியத்துடன் இருந்துகொள்ளலாம் என்ற வசதியுடன் அவரை வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி, அவரது பெண் மக்கள் திருமணத்திற்கும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, கனிசமான தொகை பொருளுதவியும் செய்யப்பட்டுள்ளது.
இப்பள்ளியில் ரமழான் தராவீஹ் தொழுகையில் முழு குர்ஆனும் ஓதி முடிக்கப்படுகிறது. நடப்பாண்டு தராவீஹ் தொழுகையை காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெருவைச் சேர்ந்த ஹாஃபிழ் கிழுறு முஹம்மத் பொறுப்பேற்று வழிநடத்தி வருகிறார்.
இப்பள்ளியில், கோப்பி ஹாஜியார் தலைமையில், காதர் முஹ்யித்தீன், எஸ்.இப்னு ஸஊத், அமீர் அலீ ஆகியோர் நிர்வாகிகளாக சேவையாற்றி வருகின்றனர்.
ஹாஃபிழ் அமீர் வலிய்யுல்லாஹ் பள்ளியில் கடந்தாண்டு நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஹாஃபிழ் அமீர் வலிய்யுல்லாஹ் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஹாஃபிழ் அமீர் வலிய்யுல்லாஹ் பள்ளியின் வரலாற்றுத் தகவல்கள் உள்ளிட்ட விபரங்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
நடப்பாண்டு இஃப்தார் நிகழ்ச்சிகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 14:19 / 03.07.2014] |