காயல்பட்டினத்தில் நேற்று (ஜூலை 04) மதியம் பலத்த காற்று வீசியதில், இரத்தினபுரியில் காயல்பட்டினம் - ஆறுமுகநேரி எல்.எஃப். வீதியில் நின்றுகொண்டிருந்த வேப்ப மரம் 14.30 மணியளவில் அடியோடு சரிந்து அருகிலிருந்த மின் கம்பத்தின் மீது விழுந்தது.
மின் கம்பம் இரும்பினாலானது என்பதால், வளைந்த நிலையில் மரத்தைத் தாங்கிக் கொண்டது. இதனால், மரம் தரையில் விழுந்து பெரும் விபத்து ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. மின் கம்பத்தின் மீது மரம் விழுந்ததில் மின் கம்பி வடங்கள் துண்டிக்கப்பட்டன.
தகவலறிந்து நிகழ்விடம் விரைந்து வந்த காயல்பட்டினம் மின் வாரிய அலுவலக ஊழியர்கள், அப்பகுதியில் மின் வினியோகத்தை உடனடியாகத் துண்டித்து, மரத்தை கொஞ்சங்கொஞ்சமாக வெட்டியகற்றினர்.
19.30 மணி வரை இப்பணி நீடித்தது. இன்று (ஜூலை 05) காலையில், பழுதான மின் கம்பம் அகற்றப்பட்டு, சிமெண்டால் ஆன புதிய மின் கம்பம் அமைக்கும் பணி பணி நடைபெற்றது.
இந்நிகழ்வில் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்:
M.L.ஹாரூன் ரஷீத் |