திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட ஆறுமுகநேரி மற்றும் குரும்பூர், திருச்செந்தூர் உபமின்நிலையத்தில் நாளை (7ம்தேதி) மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருச்செந்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் தங்கவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஆறுமுகநேரி மற்றும் குரும்பூர், திருச்செந்தூர் உபமின்நிலையத்தில் நாளை (7ம்தேதி) மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: புன்னக்காயல், ஆத்தூர், ஆறுமுகநேரி, பேயன்விளை, காயல்பட்டினம், வீரபாண்டியன்பட்டினம், அடைக்கலாபுரம், தளவாய்புரம், திருச்செந்தூர், சங்கிவிளை, கானம், வள்ளிவிளை, குரும்பூர், நல்லூர், அம்மன்புரம், பூச்சிக்காடு, கானம் கஸ்பா, காயாமொழி, நாலுமாவடி, தென்திருப் பேரை, வீரமாணிக்கம், குட்டித்தோட்டம், குரங்கனி, தேமான்குளம், திருக்களூர்.
தகவல்:
www.tutyonline.com
|