இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளையின் கவுரவ தலைவர் ஹாஜி எம்.எஸ்.எம்.பாஜுல் அஸ்ஹப் உட்பட - முஸ்லிம் லீக் அங்கத்தினரும், அபிமானிகளுமான மறைந்த நகரப் பிரமுகர்களுக்கு, கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை அலுவலகத்தில் இரங்கல் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை கலந்தாலோசனைக் கூட்டம் மற்றும் மறைந்தோருக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சி, காயல்பட்டினம் சதுக்கைத் தெருவிலுள்ள கட்சியின் அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மத் அப்துல் காதிர் மன்ஸிலில், இன்று 17.00 மணியளவில் நடைபெற்றது.
ஹாஃபிழ் கே.ஜெ.ஆர்.அப்துல் ஹக் ஃபைஸல் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் வரவேற்றுப் பேசினார். நகர தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார்.
பின்னர், அண்மையில் காலமான
(1) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கவுரவ தலைவர் ஹாஜி எம்.எஸ்.எம்.முஹம்மத் பாஜுல் அஸ்ஹப்
(2) ஹாஜி வாவு எம்.எம்.ஷாஹுல் ஹமீத்
(3) ஹாஜி பிரபு முஹ்யித்தீன் தம்பி என்ற பிரபுத்தம்பி
(4) ஹாஜி எம்.முஹம்மத் ஆரிஃப்
(5) ஹாஜி கத்தீபு கே.ஓ.ஸூஃபீ ஹுஸைன்
(6) ஹாஜி பிரபு இஸ்மாஈல்
(7) ஹாஜி தல் அஹ்மத் தம்பி
(8) ஹாஜி எம்.ஜெ.ஸிராஜுத்தீன் என்ற ஜமீல் ஸிராஜ்
(9) ஹாஜி எஸ்.டி.புகாரீ
ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டதுடன், யாஸீன் கத்தம் ஓதப்பட்டு, மேற்படி மர்ஹூம்களது பெயரில் ஈஸால் தவாப் செய்யப்பட்டது.
கலந்துகொண்டோரின் கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - மறைந்தோருக்கு இரங்கல்:
அண்மையில் காலமான
(1) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கவுரவ தலைவர் ஹாஜி எம்.எஸ்.எம்.முஹம்மத் பாஜுல் அஸ்ஹப்
(2) ஹாஜி வாவு எம்.எம்.ஷாஹுல் ஹமீத்
(3) ஹாஜி பிரபு முஹ்யித்தீன் தம்பி என்ற பிரபுத்தம்பி
(4) ஹாஜி எம்.முஹம்மத் ஆரிஃப்
(5) ஹாஜி கத்தீபு கே.ஓ.ஸூஃபீ ஹுஸைன்
(6) ஹாஜி பிரபு இஸ்மாஈல்
(7) ஹாஜி தல் அஹ்மத் தம்பி
(8) ஹாஜி எம்.ஜெ.ஸிராஜுத்தீன் என்ற ஜமீல் ஸிராஜ்
(9) ஹாஜி எஸ்.டி.புகாரீ
ஆகியோரின் மறைவுக்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன், அன்னவர்களின் மஃபிரத்திற்காக இக்கூட்டம் துஆ செய்கிறது.
தீர்மானம் 2 - அரிசி வினியோகம்:
வழமை போல, நடப்பு ரமழான் மாதத்தை முன்னிட்டு, காயல்பட்டினம் நகரிலுள்ள ஏழை - எளிய குடும்பங்களுக்கு, 24.07.2014 (ரமழான் பிறை 25) அன்று இலவச அரிசி வழங்க இக்கூட்டம் தீர்மானிப்பதுடன், அதற்காக பின்வருமாறு குழுக்களை நியமிக்கிறது:-
நன்கொடை வசூல் குழு:
(1) வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர்
(2) ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ்
(3) எம்.ஏ.முஹம்மத் ஹஸன்
வினியோகக் குழு:
(01) ஆர்.பி.ஷம்சுத்தீன்
(02) மன்னர் பாதுல் அஸ்ஹப்
(03) இப்றாஹீம் அத்ஹம்
(04) எம்.எச்.அப்துல் வாஹித்
(05) எச்.எல்.அப்துல் பாஸித்
(06) பெத்தப்பா சுல்தான்
(07) செய்யித் பூஸரீ
(08) எம்.ஏ.சி.சுஹைல் இப்றாஹீம்
(09) எஸ்.எல்.ரஹ்மத்துல்லாஹ்
(10) கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குத்பா பெரிய - சிறிய பள்ளிகளின் தலைவர் ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் காதிர் துஆ பிரார்த்தனையுடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[சிறு திருத்தம் செய்யப்பட்டது @ 04:07 / 07.07.2014] |