தமிழக அரசின் - ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் (INTEGRATED URBAN DEVELOPMENT MISSION) 2012-2013இன் கீழ் ரூபாய் 1
கோடியே 95 லட்சம் தொகையும், நகராட்சி பொதுநிதியின் கீழ் ரூபாய் 12 லட்சம் தொகையும் என மொத்தம் ரூபாய் 2 கோடியே 7 லட்சம் செலவு
மதிப்பீட்டில், காயல்பட்டினத்தில் நலத்திட்டப் பணிகள் செய்வதற்கான தீர்மானம் கடந்த 2012 அக்டோபர் மாதம் 5
ஆம் தேதி நடந்த காயல்பட்டின நகர்மன்ற அவசர கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து - இப்பணிகள் குறித்த விளம்பரம் அக்டோபர் 17, 2012 - நாளிதழ்களில் வெளியானது.
பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் குறித்து நவம்பர் 30, 2012 அன்று நடந்த நகர்மன்றக் கூட்டத்தில் முடிவு
செய்யப்பட்டது.
நகர்மன்றத்தால் - நவம்பர் 30, 2012 கூட்டத்தில் - அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளில் ஒன்று - புதுப்பள்ளி முதல் புதிய பேரூந்து நிலையம் வரை மழை நீர் வடிகால் அமைக்கும் பணியாகும். 13 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இப்பணியை தளவாணிமுத்து என்ற ஒப்பந்ததாரர் மதிப்பீட்டு தொகைக்கே செய்திட சம்மதம் தெரிவித்து, பணி ஒப்பந்தம் பெற்றார். சுமார் 250 மீட்டர் நீளத்திற்கு இம்மழை நீர் வடிகால் அமைக்கப்படவேண்டும்.
நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த இப்பணி மீண்டும் துவங்கியுள்ளது. இப்பணிகள் குறித்த விபரங்களை நகர்மன்றத் தலைவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
முகநூல் பக்கத்தில் நகர்மன்றத் தலைவர் தெரிவித்திருப்பதாவது:
இப்பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் வழங்கப்பட்ட நிலையில், இப்பணிகள் குறித்த அனைத்து விபரங்களையும் (ESTIMATE, பணியின் தொழில் நுட்ப விபரங்கள்) நகரின் அனைத்து ஜமாஅத்துகளுக்கும், ஊர் நல குழுக்களுக்கும், பொது நல அமைப்புகளுக்கும், ஊடகங்களுக்கும் அனுப்பி வைத்திருந்தேன்.
தற்போது புதுப்பள்ளி முதல் பேருந்து நிலையம் வரையிலான மழை நீர் வடிகால் பணிகள் துவங்கியுள்ளன. முன்னர் வழங்கிய விபரங்கள் பலரிடம் தற்போது இல்லாமல் இருக்கலாம். எனவே இப்பணிகள் குறித்த தொழில் நுட்ப விபரங்களை இணைத்துள்ளேன்.
மக்கள் நல பணிகள் சீராக நடைபெறவேண்டும் என்று ஆர்வமுள்ள அனைத்து மக்களும் இந்த பணியை மற்றுமன்றி, அனைத்து அரசு பணிகளும் முறையாக, வடிவமைத்தப்படி நடைபெறுகிறதா எனக் கண்காணிக்க கேட்டு கொள்கிறேன்.
மறந்து விட வேண்டாம் - இவை மக்களின் வரிப்பணத்தில் நடக்கும் பணிகள்.
இப்பணி குறித்த ஆவணம்
தகவல்:
நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபித் சேக் உடைய
முகநூல் பக்கம் (https://www.facebook.com/aabidha.shaik)
|