இலங்கை காயல் நல மன்றம் - காவாலங்கா அமைப்பின் சார்பில், இம்மாதம் 11ஆம் நாளன்று, இஃப்தார் - நோன்பு துறப்பு ஒன்றுகூடலுடன், பொதுக்குழுக் கூட்டமும் நடத்தப்படவுள்ளது.
இந்நிகழ்வில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்து, அம்மன்ற நிர்வாகத்தின் சார்பில் அதன் செயலாளர் பி.எம்.ரஃபீக் வெளியிட்டுள்ள அழைப்பறிக்கை:-
அன்பின் மன்ற உறுப்பினர்கள் மற்றும் இலங்கை வாழ் காயலர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.
வல்ல அல்லாஹ்வின் பேரருளால், வரும் 11.07.2014 வெள்ளிக்கிழமை 17.00 மணியளவில், நமது மன்றத்தின் சார்பில், இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன், உறுப்பினர் பொதுக்குழுக் கூட்டம், கொழும்பு - கொள்ளுப்பிட்டியிலுள்ள Buhary Communication இல்லத்தில் இன்ஷாஅல்லாஹ் நடத்தப்படவுள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறோம்.
மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும், இலங்கை நாட்டில் வசிக்கும் அனைத்து காயலர்களும், இச்செய்தியையே அழைப்பாகக் கருதி, குறித்த நேரத்தில் இஃப்தார் நிகழ்ச்சியிலும், பொதுக்குழுக் கூட்டத்திலும் கலந்துகொள்ள வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
கருணையுள்ள ரஹ்மான் இந்த சங்கை மிகுந்த ரமழானின் பொருட்டால், நமது பாவங்களை மன்னித்து ஈருலக நன்மைகளைத் தந்தருள்வானாக ஆமீன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை காயல் நல மன்றம் (காவாலங்கா) அமைப்பின் சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) நடத்தப்பட்ட இஃப்தார் நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இலங்கை காயல் நல மன்றம் (காவாலங்கா) தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |