காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் வளாகத்தில் இயங்கி வரும் மத்ரஸத்துல் ஹாமிதிய்யாவின் முன்னாள் மாணவரும், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் முன்னாள் செயற்குழு உறுப்பினருமான - காயல்பட்டினம் தீவுத்தெருவைச் சேர்ந்த ஹாஜி எம்.ஜெ.ஸிராஜுத்தீன் என்ற ஜமீல் ஸிராஜ், இம்மாதம் 01ஆம் நாளன்று காலமானார். அவருக்கு வயது 45.
அன்னாரின் பாவப் பிழை பொறுப்பிற்காக (மஃபிரத்திற்காக) துஆ - பிரார்த்தனை செய்யவும், அவரது சேவைகளை நினைவுகூர்வதற்காகவும், இன்று 16.45 மணியளவில், மத்ரஸா ஹாமிதிய்யா வளாகத்தில் கத்முல் குர்ஆன் மஜ்லிஸும், இரங்கல் கூட்டமும் நடைபெற்றது.
ஹாஜி ஒய்.எஸ்.முஹம்மத் ஃபாரூக் நிகழ்ச்சிகளுக்குத் தலைமை தாங்கினார். எஸ்.ஏ.பீர் முஹம்மத், கே.எஸ்.செய்யித் செய்யித் அப்துர்ரஹ்மான், மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ, கே.எஸ்.கிழுறு முஹம்மத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துவக்கமாக கத்முல் குர்ஆன் ஓதப்பட்டு, மர்ஹூம் அவர்களின் பெயரில் ஈஸால் தவாப் செய்யப்பட்டது. ஹாஃபிழ் எஸ்.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா துஆ இறைஞ்சினார்.
அடுத்து இரங்கல் கூட்டம் நடைபெற்றது. ஹாஃபிழ் எம்.ஐ.கே.செய்யித் அபூதாஹிர் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மாணவர் ஜெ.எஸ்.அல்தாஃப் அஹ்மத் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.
ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவன முதல்வர் நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ, அதன் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ ஆகியோர் இரங்கல் உரையாற்றினர். எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் இரங்கல் கவி பாடினார்.
மர்ஹூம் அவர்களது குடும்பத்தின் சார்பில், என்.டி.முஹம்மத் இஸ்மாஈல் புகாரீ நன்றி தெரிவித்து உரையாற்றினார்.
ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவன ஆசிரியர் கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத் நன்றி கூற, ‘முத்துச்சுடர்’ மாத இதழ் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ துஆ பிரார்த்தனையுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
அனைத்து நிகழ்ச்சிகளிலும், மத்ரஸாவின் மாணவர்கள், நிர்வாகிகள், ஆசிரியர்கள் உட்பட திரளானோர் கலந்துகொண்டனர்.
தகவல்:
ஹாஃபிழ் M.I.K.செய்யித் அபூதாஹிர்
மர்ஹூம் எம்.ஜெ.ஸிராஜுத்தீன் என்ற ஜமீல் ஸிராஜ் காலமானது தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஹாமிதிய்யா மத்ரஸா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |