நடப்பு ரமழான் மாதத்தை முன்னிட்டு, சிங்கப்பூர், அபூதபீ காயல் நல மன்றங்கள் சார்பில், நடப்பு ரமழான் மாதத்தை முன்னிட்டு, காயல்பட்டினத்திலுள்ள ஏழை-எளிய 120 குடும்பங்களுக்கு, தலா ரூபாய் 2 ஆயிரத்து 704 செலவு மதிப்பில், மொத்தம் ரூபாய் 3 லட்சத்து 24 ஆயிரத்து 480 ரூபாய்க்கு - அத்தியாவசிய சமையல் பொருட்கள் உதவியாக வழங்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் சாளை நவாஸ் முன்னிலையில், அதன் உள்ளூர் பிரதிநிதி கே.எம்.டி.சுலைமான், சமூக ஆர்வலர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை ஆகியோரிணைந்து அப்பொருட்களை பயனாளிகளின் இல்லங்களுக்குத் தேடிச் சென்று வழங்கியுள்ளனர்.
ஒருவருக்கே பலமுறை வினியோகம் செய்யப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, சமையல் பொருட்கள் பெற்ற பயனாளிகள் பற்றிய முழு விபரங்களும் அனைத்து காயல் நல மன்றங்களுக்கும் பகிரப்பட்டுள்ளதாக, சிங்கப்பூர் காயல் நல மன்ற செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் காயல் நல மன்றம் சார்பில் இதற்கு முன் அத்தியவாசிய சமையல் பொருட்கள் வினியோகிக்கப்பட்ட செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
சிங்கப்பூர் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
அபூதபீ காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
தகவல் & படங்கள்:
K.M.T.சுலைமான்
உள்ளூர் பிரதிநிதி - சிங்கை காயல் நல மன்றம் |