காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் (சிங்கித்துறை), கடையக்குடி (கொம்புத்துறை) ஆகிய பகுதிகளில் மீனவர் குடும்பங்கள் ஏராளமாக உள்ளன.
இயற்கை சீற்றங்களான கடல் அரிப்பு, புயல் போன்றவற்றால் இவர்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவதாக பல ஆண்டுகளாக இம்மக்கள் தெரிவித்து வருகின்றனர். இதற்கு நிவாரணமாக தூண்டில் பாலம் அமைப்பது நீண்ட நாள் கோரிக்கையாக இம்மக்களிடம் இருந்து வருகிறது. இப்பகுதியில் தூண்டில் பாலம் (GROYNE) அமைத்திட சமீபத்தில் அதிகாரிகளால் 24 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு செய்யப்பட்டதாக தெரிகிறது.
இத்திட்டத்திற்கு, அரசு நிதி ஒதுக்கிட கோரி, அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் திரு அந்தோணி, அப்பகுதி ஊர் நல குழுக்கள், அமைப்புகள் வழங்கிய கோரிக்கை மனுவுடன், தனது மனுவினையும் இணைத்து - மீன் வளத்துறை அமைச்சர் திரு கே.ஏ. ஜெயபால், தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த சுற்றுலா துறை அமைச்சர் சண்முகநாதன், மீன் வளத்துறை அரசு செயலர் டாக்டர் எஸ்.விஜயகுமார் IAS, பொது பணித்துறை அரசு செயலர் எம்.சாய்குமார் IAS ஆகியோரிடம் - ஜூலை 3 மற்றும் ஜூலை 4 ஆகிய தேதிகளில், சென்னையில் - நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் வழங்கியுள்ளார்.
இச்சந்திப்புகள் போது - காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 7வது வார்டு உறுப்பினர் ஜே.அந்தோணி உடனிருந்தார்.
இது குறித்த தகவல் - நகர்மன்றத் தலைவரின் முகநூல் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
தகவல்:
நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபித் சேக் உடைய
முகநூல் பக்கம் (https://www.facebook.com/aabidha.shaik)
|