DCW தொழிற்சாலையின் விரிவாக்கத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய கோரி, தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி. வெங்கடாசலத்திடம், சென்னையில் - ஜூன் 4 (வெள்ளிக்கிழமை) அன்று காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் மனு ஒன்றினை வழங்கியுள்ளார். அந்த மனுவில் உள்ள விபரங்கள் வருமாறு:
3.7.2014
பெறுனர்
மாண்புமிகு திரு தோப்பு என்.டி.வெங்கடாசலம் அவர்கள்,
சுற்றுச்சுழல் துறை அமைச்சர்,
தலைமை செயலகம், சென்னை.
ஐயா,
பொருள்: தூத்துக்குடி மாவட்டம் DCW தொழிற்சாலையின் விரிவாக்கத் திட்டத்திற்கு வழங்கப்பட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியை ரத்து செய்ய கோரி
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகராட்சின் எல்லைக்குள் அமைந்துள்ளது DCW தொழிற்சாலை. இப்பகுதியில் 1958ம் ஆண்டு துவக்கப்பட்ட இத்தொழிற்சாலை ஏற்படுத்தும் மாசுவினால், காயல்பட்டினம் மக்கள் பல ஆண்டுகளாக பல இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். சமீபத்தல் புற்றுநோயும் அதிகரித்துள்ளது.
நிலைமை இவ்வாறிருக்க - இந்நிறுவனம், தனது தொழிற்சாலையை விரிவாக்க அனுமதி கோரியிருந்தது. இதனை எதிர்த்து காயல்பட்டினம் மக்கள், 2012ம் ஆண்டு, ஆர்ப்பாட்டமும் நடத்தினர், கோரிக்கை மனுக்களும் வழங்கியுள்ளனர்.
இதுவரை மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்யாமல், விரிவாக்கத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதே மக்களின் கோரிக்கை. இதற்கிடையில் - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஏப்ரல் மாதம், தொழிற்சாலையின் விரிவாக்கப்பணிகளுக்கு CTE என்ற அனுமதியை வழங்கியுள்ளது.
இதனை எதிர்த்து - காயல்பட்டினம் மக்கள் சார்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஜூன் 20 அன்று பொது மக்களும், கருப்பு கொடி ஏற்றி, மனித சங்கிலி போராட்டமும் நடத்தினர்.
எனவே - மக்களிடம் எதிர்ப்பினை பெற்றுள்ள இந்த விரிவாக்கத் திட்டத்திற்கு அனுமதி வழங்கவேண்டாம் என காயல்பட்டினம் பொது மக்கள் சார்பாக தங்களை நான் கேட்டு கொள்கிறேன்.
இவண்,
தங்கள் உண்மையுள்ள,
ஐ.ஆபிதா சேக்,
தலைவர், காயல்பட்டினம் நகராட்சி.
இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த தகவல் - நகர்மன்றத் தலைவரின் முகநூல் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
தகவல்:
நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபித் சேக் உடைய
முகநூல் பக்கம் (https://www.facebook.com/aabidha.shaik)
|