காயல்பட்டினம் நகராட்சிக்கு புதிய குடிநீர் திட்டம், பொன்னன்குறிச்சி அருகில் தாமரபரணி ஆற்றில் இருந்து - காயல்பட்டினம் வரை குழாய்கள்
நிறுவப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகிறது. சுமார் 29.70 கோடி ரூபாய் மதிப்பிலான இப்பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் - ஜூலை 2012இல் அறிவிக்கப்பட்டு, செப்டம்பர் 4 அன்று காயல்பட்டினம்
நகராட்சியில் திறக்கப்பட்டது.
பெறப்பட்ட இரு ஒப்பந்தப்புள்ளிகளில் குறைந்த ஒப்பந்தப்புள்ளி வழங்கிய SHRIRAM EPC நிறுவனத்திற்கு வேலை
ஆணை வழங்கப்பட்டு, தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த திட்டம் மத்திய அரசின் UIDSSMT (Urban Infrastructure Development Scheme for Small and Medium Towns) திட்டத்தின் கீழ்
அமல்படுத்தப்படவுள்ளது. மொத்த திட்ட தொகையில் 80 சதவீதம் மத்திய அரசும், 10 சதவீதம் மாநில அரசும், 10 சதவீதம் காயல்பட்டினம்
நகராட்சியும் பங்களிக்கும்.
மொத்த மதிப்பீடான, 29.70 கோடி ரூபாயில், மத்திய அரசின் பங்கு - 23 கோடி, 73 லட்சத்து, 60 ஆயிரம் ரூபாய். இத்தொகையின் முதல்
தவணையை (11 கோடி, 86 லட்சத்து, 80 ஆயிரம் ரூபாய்) மத்திய அரசு மார்ச் 2012 இல் வழங்கியது.
மாநில அரசின் பங்கு தொகை - 2 கோடியே, 96 லட்சத்து, 70 ஆயிரம் ரூபாயாகும். அதில் முதல் தவணை தொகையான - 1 கோடியே, 48 லட்சத்து, 35 ஆயிரம் ரூபாயினை ஏற்கனேவே - மாநில அரசு - வழங்கிவிட்டது.
இத்திட்டத்திற்கான காயல்பட்டினம் நகராட்சியின் பங்கு தொகை - 2 கோடியே, 96 லட்சத்து, 70 ஆயிரம் ரூபாயாகும். அதில் - 2 கோடி
ரூபாயினை, மாநில அரசு, காயல்பட்டினம் நகராட்சிக்கு - 2011-12 ம் ஆண்டு IUDM திட்ட வகையில் உரித்தான 2.5 கோடி ரூபாயில் இருந்து வழங்கியது என தெரிகிறது. [இத்தொகை மாநில அரசின் நேரடி பங்கு என அப்போது செய்தி
வெளியிடப்பட்டிருந்தது].
எஞ்சிய தொகையான 97 லட்ச ரூபாயினை IUDM திட்டத்தின் 2012 - 13 ஒதுக்கீட்டின் மூலம் காயல்பட்டினம் நகராட்சிக்கு, மாநில அரசு வழங்கியது என தெரிகிறது.
இதன் மூலம் - இக்குடிநீர் திட்டத்திற்கு, காயல்பட்டினம் நகராட்சியின் பங்கு முழுமையாக நிறைவேற்றப்பட்டும், மத்திய - மாநில அரசுகளின் பங்கு, பாதி
வழங்கப்பட்ட நிலையில் இருந்தது.
மே 19, 2014 வெளியான தமிழக அரசு ஆணை எண் 186 வழங்கும் தகவல்படி, மத்திய - மாநில அரசுகள், தற்போது - இரண்டாம் தவணை
தொகைகளை (மத்திய அரசு பங்கு - 11 கோடி, 86 லட்சத்து, 80 ஆயிரம் ரூபாய்; மாநில அரசு பங்கு - 1 கோடியே, 48 லட்சத்து, 35 ஆயிரம்
ரூபாய்) வழங்கிவிட்டன.
அரசு ஆணை முழுமையாக...
|