காயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரியில் 15.06.2014 அன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் காயல்பட்டினத்தைச் சேர்ந்த 7 மாணவர்கள் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ ஸனது - பட்டச் சான்றிதழ் பெற்றுள்ளனர். விரிவான விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரியில், 7 ஆண்டு பாடத்திட்டத்தைக் கொண்ட ‘மவ்லவீ ஆலிம்’ பாடப்பிரிவு, திருமறை குர்ஆனை மனனம் செய்யப் பயிற்றுவிக்கும் ‘ஹிஃப்ழு’ப் பிரிவு, பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்களுக்கு இஸ்லாமிய மார்க்க அடிப்படைக் கல்வி - ஒழுக்கத்தைப் பயிற்றுவிப்பதற்காக ‘மக்தபத்துர் ராஸிய்யா’ என்ற பெயரில் தீனிய்யாத் பிரிவு ஆகியன நடத்தப்பட்டு வருகிறது.
இந்த அரபிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா, 15.06.2014 ஞாயிற்றுக்கிழமை காலையில், கல்லூரியின் முதல்வரும், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவரும், காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீபுமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ தலைமையில் கிராஅத்துடன் துவங்கியது.
கல்லூரி மாணவர்களின் அரபி பாடலைத் தொடர்ந்து, கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ கே.சுல்தான் ஸலாஹுத்தீன் மளாஹிரீ வரவேற்புரையாற்றினார்.
இக்கல்லூரியின் ஹிஃப்ழுப் பிரிவில் பயின்று, திருமறை குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்துள்ள - காயல்பட்டினத்தைச் சேர்ந்த 7 மாணவர்களுக்கு ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ ஸனது - பட்டச் சான்றிதழ்களை, கலீஃபத்துஷ் ஷாதுலீ மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எம்.அப்துல் காதிர் முத்துவாப்பா ஃபாஸீ வழங்கினார்.
பட்டம் பெற்ற மாணவர்களின் விபரம் வருமாறு:-
(1) ஹாஃபிழ் எஸ்.டி.அப்துல் மாஜித்
த.பெ. ஷெய்க் தாவூத்
எல்.எஃப். வீதி
(2) ஹாஃபிழ் எல்.எம்.எல்.தர்வேஷ் முஹ்யித்தீன்
த.பெ. லுகவி முஹம்மத் லெப்பை
சதுக்கைத் தெரு
(3) ஹாஃபிழ் கே.ஏ.முஹம்மத் அபூபக்கர்
த.பெ. காழீ அலாவுத்தீன்
குறுக்கத் தெரு
(4) ஹாஃபிழ் ஐ.முஹம்மத் ஜெய்னுல் ஆபிதீன்
த.பெ. இக்பால்
சின்ன நெசவுத் தெரு
(5) ஹாஃபிழ் எஸ்.எம்.எச்.முஹம்மத் ஃபரீதுத்தீன்
த.பெ. மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ
ஜாவியா தெரு
(6) ஹாஃபிழ் கே.எம்.மீரா ஸாஹிப்
த.பெ. எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன்
நெய்னார் தெரு
(7) ஹாஃபிழ் எஸ்.எம்.நூஹ் ரியாஸ்
த.பெ. எம்.என்.செய்யித் முஹம்மத்
புதுக்கடைத் தெரு
பட்டம் பெற்ற மாணவர்களுக்கு, கல்லூரியின் சார்பில் அதன் நிர்வாகி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ பரிசுகளை வழங்கினார்.
காயல்பட்டினத்திலுள்ள மத்ரஸாக்களில் மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில், அந்த மத்ரஸாக்களில் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ ஸனது பெறும் மாணவர்களுக்கு சிங்கப்பூர் காயல் நல மன்றம் சார்பில் பணப்பரிசு வழங்கப்படுவது வழமை. அதனடிப்படையில், இவ்விழாவில் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ ஸனது பெற்ற 7 மாணவர்களுக்கும் ரூபாய் 2,500 பணப்பரிசை - அம்மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி கே.எம்.டி.சுலைமான் வழங்கினார்.
கல்லூரி பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ பட்டமளிப்புப் பேருரையாற்றினார்.
ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவன பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, மவ்லவீ என்.ஹாமித் பக்ரீ மன்பஈ உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இலங்கை உலமாக்கள் சபை நிர்வாகி மவ்லவீ அப்துல் ஜப்பார் சிறப்புரையாற்றினார்.
இக்கல்லூரியில் 8 ஆண்டு பாடத்திட்டத்தின் கீழ் தீனிய்யாத் பிரிவில் கற்றுத் தேர்ந்த மாணவர்களுக்கு பட்டயச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கடந்த ஜூன் மாதம் 06, 07, 08 நாட்களில் கல்லூரியின் அனைத்துப் பிரிவு மாணவர்களுக்காக நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும், கடந்த கல்வியாண்டில் சிறப்பிடங்களைப் பெற்ற மாணவர்களுக்கும் இவ்விழாவின்போது பரிசுகள் வழங்கப்பட்டன. நகரப் பிரமுகர்கள் பரிசுகளை வழங்கினர்.
தொடர்ந்து, கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பணப்பரிசு வழங்கப்பட்டது. ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா அவற்றை வழங்கினார்.
மவ்லவீ ஹாஃபிழ் ஏ.எச்.முஹம்மத் நூஹ் ஃபாஸீ நன்றி கூற, ஜாவியா ஹிஃப்ழுப் பிரிவு பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் ஒய்.எம்.அப்துல்லாஹ் ஃபாஸீ துஆவுக்குப் பின் ஜலாலாவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. விழாவில், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
அன்று மாலையில், பட்டம் பெற்ற மாணவர்களை, ஜாவியா பைத் பிரிவினர் - அரபி பைத்துகளைப் பாடியவாறு நகர்வலமாக அவர்களின் இல்லங்களுக்குச் சென்று வழியனுப்பி வைத்தனர்.
ஜாவியா அரபிக்கல்லூரியின் முந்தைய பட்டமளிப்பு விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஜாவியா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
சிங்கை காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 14:18 / 12.07.2014] |