நடப்பு ரமழான் மாதத்தை முன்னிட்டு, தம்மாம் காயல் நல மன்றம் சார்பில் 95 ஏழைக் குடும்பங்களுக்கு சுமார் 1.5 லட்சம் ரூபாய் செலவில் அத்தியாவசிய சமையல் பொருளுதவி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அம்மன்றத்தின் துணைச் செயலாளர் எம்.எம்.செய்யித் இஸ்மாஈல் தெரிவித்துள்ளதாவது:-
எமது தம்மாம் காயல் நல மன்றம் சார்பாக இந்த கண்ணியமிக்க ரமலான் மாதத்தில் எல்லா தரப்பினரும் மனமகிழ்வுடன் நோன்புகளை நோற்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இரண்டாம் வருடமாக 95 குடும்பங்களுக்கு ரூ 1,52,150. பெருமதியான - ரமலான் மாதத்திற்குத் தேவையான உணவுப் பொருட்கள் கடந்த 02.07.2014 புதன்கிழமையன்று வினியோகிக்கப்பட்டது. இதனை பெற்ற பயனாளிகள் மனமகிழ்வுடன் நன்றி தெரிவித்து துஆ செய்தனர்.
இதற்கான தொகை முழுவதையும், தம்மாம் காயல் நல மன்ற அங்கத்தினரால் மனமுவந்து தாராளமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. கிருபையான அல்லாஹ் இந்த நற்செயலை அங்கீகரித்து மகத்தான நற்கூலிகளை தருவானாக!
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தம்மாம் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |