தமிழக அரசின் - ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் (INTEGRATED URBAN DEVELOPMENT MISSION) 2012-2013இன் கீழ் ரூபாய் 1 கோடியே 95 லட்சம் தொகையும், நகராட்சி பொதுநிதியிலிருந்து ரூபாய் 12 லட்சம் தொகையும் என மொத்தம் ரூபாய் 2 கோடியே 7 லட்சம் செலவு மதிப்பீட்டில், காயல்பட்டினத்தில் நலத்திட்டப் பணிகள் செய்வதற்கான தீர்மானம் கடந்த 2012 அக்டோபர் மாதம் 05ஆம் நாளன்று நடந்த நகர்மன்ற அவசரக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, அப்பணிகள் குறித்த விளம்பரம் அக்டோபர் 17, 2012 - நாளிதழ்களில் வெளியானது.
பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் குறித்து நவம்பர் 30, 2012 அன்று நடந்த நகர்மன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
நவம்பர் 30, 2012 அன்று நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் - அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளில் ஒன்று - புதுப்பள்ளி முதல் பேருந்து நிலையம் வரை மழை நீர் வடிகால் அமைக்கும் பணியாகும். 13 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இப்பணியை தளவாணிமுத்து என்ற ஒப்பந்ததாரர் மதிப்பீட்டு தொகைக்கே செய்திட சம்மதம் தெரிவித்து, பணி ஒப்பந்தம் பெற்றார். சுமார் 250 மீட்டர் நீளத்திற்கு இம்மழை நீர் வடிகால் அமைக்கப்படவேண்டும்.
நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த நிலையில் தற்போது துவக்கப்பட்டுள்ளது. இன்று காலையில் மழை நீர் வடிகால் கட்டுமானப் பணி துவங்கியுள்ளது.
தகவல்:
‘யுனைட்டெட்’ ஸிராஜ் |