விஸ்டம் பப்ளிக் பள்ளியிலுள்ள கே.ஜி. வகுப்பைச் சேர்ந்த மழலையர், ஜூன் 26ஆம் தேதியன்று செந்நாள் (Red Day) கொண்டாடினர்.
இதுகுறித்து, அப்பள்ளியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
எமது விஸ்டம் பப்ளிக் பள்ளியிலுள்ள கே.ஜி. வகுப்பைச் சேர்ந்த மழலையர், ஜூன் 27ஆம் நாளன்று செந்நாள் (Red Day) கொண்டாடினர். மழலையருக்கு எளிய முறையில் வர்ணங்களை அறிமுகப்படுத்தும் விதமாக இந்நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
செயல்முறை அடிப்படையிலான (activity based) பாடத்திட்டத்துடன் தரம் வாய்ந்த கல்வியை அளிக்கும் நோக்குடன் இப்பள்ளி நடத்தப்படுவதால், மாதந்தோறும் அவர்களுக்கு பல்வேறு செயல்திட்டங்களை வடிவமைத்துக் கொடுத்து, அவற்றைச் செய்வதன் மூலம் அவர்களின் தனித்திறனை வெளிக்கொணர இப்பள்ளி திட்டமிட்டுள்ளது.
அதனடிப்படையில், சிவப்பு நிறம் குறித்தும், அந்நிறத்திலுள்ள பழங்கள், பூக்கள், கிடைக்கப்பெறும் பொதுவான பொருட்கள் குறித்தும் குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கவும், ஒளிரும் செந்நிறத்தால் அவர்களை மகிழ்விக்கும் நோக்குடனும் செந்நாள் - Red Day நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
குழுவாக இணைந்து பணியாற்றுதில் அவர்களுக்கு பரிச்சயத்தை ஏற்படுத்துவதற்காக, சிவப்பு நிற தொப்பி (Cap) அணிந்து, ஸ்டாபெர்ரி குழு, ஆப்பிள் குழு, ரோஜாப்பூ குழு என குழுக்களாக மழலையரை வகைப்படுத்தி, இணைந்து பாடல்களைப் பாட அவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டது.
இவ்வாறு, விஸ்டம் பப்ளிக் பள்ளி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
விஸ்டம் பப்ளிக் பள்ளி சார்பாக...
S.I.புகாரீ
(அறங்காவலர்)
விஸ்டம் பப்ளிக் பள்ளி சார்பில் கடந்தாண்டு (2013) நடத்தப்பட்ட செந்நாள் கொண்டாட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
விஸ்டம் பப்ளிக் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |