சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில், பணியிட மாற்றலாகிச் செல்லும் - அம்மன்றத்தின் முன்னாள் தலைவருக்கு பிரியாவிடை அளிக்கப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
ரியாத் காயல் நல மன்றத்தின் 42-வது முறைசாரா செயற்குழு கூட்டம், மன்ற முன்னாள் தலைவர் சகோதரர் மின்ஹாஜ் முஹய்தீன் அவர்களுக்கு பிரிவு உபச்சார நிகழ்வாக கடந்த வெள்ளிக்கிழமை (27-Jun-14) மக்ரிப் தொழுகைக்கு பிறகு தலைவர் ஹாபிழ் செய்ஹு தாவூது இத்ரீஸ் அவர்களது இல்லத்தில் வைத்து நடந்தேறியது.
பணியிடம் மாற்றலாக செல்லவிருக்கும் மன்ற முன்னாள் தலைவருக்கு பிரியாவிடை கொடுக்கும் நிகழ்ச்சியில் ஆரம்பமாக ஹாபிழ் PSJ ஜைனுல் ஆப்தீன் இறைமறை ஓத, ஆலோசனைக்குழு உறுப்பினர் கூஸ் அபூபக்கர் அவர்கள் அனைவரயும் வரவேற்று இந்நிகழ்ச்சிக்கு முன்னிலையும் வகித்தார்.
அடுத்து கூட்டத்தில் பங்கெடுத்த சக உறுப்பினர்கள் முன்னாள் தலைவரின் செயல்பாடுகளையும், அவருக்கே உண்டான ஈகை குணத்தையும் வெகுவாக பாராட்டியும், வாழ்த்தியும் பேசினார்கள்.
தற்போதைய தலைவர் ஹாபிழ் செய்ஹு தாவூது இத்ரீஸ் தனது வாழ்த்துரையில் குறிப்பிடும்போது நண்பர் மின்ஹாஜ் என்னிடம் முதலில் கைப்பேசியில்தொடர்பு கொண்டு பணியிடம் மாற்றாலாக போவதை சொல்லும்போது மிகவும் தான் சோர்வடைந்து போனதாகவும் அதன் பிறகு சுதாரித்துக்கொண்டு நண்பர் அடுத்து அவரது இலக்கை அடைய முன்னேறுகிறார் என்ற அளப்பெரிய சந்தோஷத்துடன் திருப்தி பெற்றதாகவும் தனதுரையில் வெளிப்படுத்தினார்.
ஆலோசனைக்குழு உறுப்பினர் சகோதரர் ஹைதர் அலி அவர்கள் சகோதரர் மின்ஹாஜ் சப்தமில்லாமல் செய்யும் உதவிகள் நமதூர் மட்டுமல்ல, வெளியூர் ஏனய அமைப்புகளுக்கும் உதவிக்கரம் நீட்டுவதையும் இந்நேரத்தில் நினைவு கூர்ந்தார், நம் அனைவருக்கும் முன்னோடியாக திகழ்வதையும் சுட்டி காட்டினார்.
அடுத்து கூஸ் அபூபக்கர் அவர்கள் தனக்கும் நண்பர் மின்ஹாஜ் க்கும் இடையில் உள்ள இளமைக்கால நட்பை நினைவுபடுத்தி பேசினார், பிறகு இம்மன்றத்தில் மின்ஹாஜ் ஆற்றிய பணிகள் குறித்தும், அவர் ஒரு அமைதிப்புரட்சி என்றும், எந்த கஷ்டமான சூழ்நிலையிலும் மிக நேர்த்தியாக தனக்கே உரித்தான புன்னகையுடன் கையாளக்கூடிய திறன் படைத்தவர் என்று புகழாரம் சூட்டினார்.
மன்ற துணைத்தலைவர் முஹம்மத் நூஹ் அவர்கள் குறிப்பிடுகையில் நண்பர் மின்ஹாஜ் அவர்கள் தலைவராக பணியாற்றும்பொழுது மன்ற செயல்பாடுகளில் எந்த சந்தேகங்களையும் யாரிடமும் கேட்க வெட்கப்படுவதில்லை என்றும் குறிப்பிட்டு பேசினார். அவரின் இல்லாமை RKWA க்கு பெரிய இழப்பாகவே கருதுவதாக குறிப்பிட்டார்.
எம்மன்ற மூத்த உறுப்பினர் சகோதரர் நயீமுல்லாஹ், சகோதரர் மின்ஹாஜ் அவர்கள் பணியிடம் மாற்றலாக போனாலும் அவர் என்றுமே எமது RKWA வின் ஆலோசனைக்குழு உறுப்பினராகவே கருத்தில் கொண்டு தங்களது மேலான ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
அனைவரும் தனது வாழ்த்துரையின் இறுதியில் அவரின் அடுத்த இலக்குப்பயணம் வெற்றி அடைய வல்ல இறைவனிடம் பிரார்தித்து துஆ செய்தார்கள்.
இறுதியாக சகோதரர் மின்ஹாஜ் அவர்கள் தனது ஏற்புரையில் மன்ற அனைத்து உறுபினர்களின் வாழ்த்துரையில் தாம் மிகவும் நெகிழ்ந்து போனதாகவும், இம்மன்றத்தினால் பெற்ற தலைமை பதவி என்னை பெரிய உச்சாணிக்கே கொண்டு போய் விட்டதாகவும், அதன் சான்றாக ஊரில் நடந்த பல அமர்வில் என்னை விட வயதிலும், அனுபவத்திலும் முதிர்ந்த நமதூர் மக்களிடையே தாம் கௌரவிக்கப்பட்ட விதம் என்னை நெகிழச்செய்ததாகவும் குறிப்பிட்டார். நமது மன்றம் உலக காயல் மன்றங்களின் இடையே மிக முதிர்ந்த மன்றமாக செயல்படுவதையும், அதே நேரத்தில் நம் மன்ற சக உறுப்பினர்கள் கையாளும் விதம் முதிர்ச்சி அடைய வழி வகுப்பதாகவும் வெகுவாக பாராடிப்பேசினார். உலகில் எந்த கோடிக்கு சென்றாலும் RKWA வோடு தொடர்பில் இருப்பேன் என்றும் உறுதி அளித்தார்.
மன்ற உறுப்பினர்கள் மத்தியில் அவருக்கு தலைவர் ஹாபிழ் செய்ஹு தாவூது இத்ரீஸ் மற்றும் துணைத்தலைவர்கள் முஹம்மத் நூஹ், PMS முஹம்மத் லெப்பை அவர்கள் நினைவுப்பரிசை வழங்கினார்கள், அதோடு ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் சகோதரர் ஹைதர் அலி மற்றும் கூஸ் அபூபக்கர் அவர்கள் சால்வை அணிவித்து கௌரவித்தார்கள்.
ஹாபிழ் SAC அஹ்மத் சாலிஹ் மற்றும் தலைவரின் அனுசரணையோடு, ஹாபிழ் PSJ ஜைனுல் ஆப்தீன் அவர்கள் துஆ ஓத கூட்டம் இனிதே நிறைவுற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியாத் காயல் நல மன்றம் சார்பில்...
தகவல் & படங்கள்:
நோனா செய்யித் இஸ்மாஈல்
(செய்தி தொடர்பாளர்)
ரியாத் காயல் நல மன்றத்தின் முந்தைய (41ஆவது) செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ரியாத் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |