2. Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் )[03 July 2014] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35769
இதிலே என்ன அதிசயம்?
பழைய இரும்பு, தகரம், பிளாஸ்டிக், பாட்டில் ... இவற்றின் மறு உருவம்தானே இது.
சென்ற விடுமுறையில், ஒரு சகோதரர் வீட்டிற்கு சென்று இருந்தேன். அவரின் மகன் காலி செண்டு பாட்டிலை வியாபாரியிடம் விற்றுக்கொண்டு இருந்தான். ஒரு ஸ்ப்ரே பாட்டிலை வியாபாரி 15 ரூபாய்க்கு எடுத்தார்.
பின்பு அவர், இதன் கவர்/அட்டைப் பெட்டி இருக்கா..? என்றார். நண்பனின் மகன் உள்ளே சென்று அதன் அட்டை பெட்டியை கொண்டு வந்து கொடுத்தான். மறு பேச்சு இல்லாமல் அந்த வியாபாரி, அட்டை பெட்டிக்கு 90 ரூபாய் கொடுத்தார். அனைவர்களும் அதிர்ந்து போனோம்.
கூடுதல் அதிர்ச்சி நண்பனுக்கு..!! இந்த ஸ்ப்ரே-யை, 5 திர்ஹமுக்கு தானே வாங்கினோம். எப்படி.. இப்படி.. என்று..!!
3. Re:...வறுமைக் கோடு.... posted bymackie noohuthambi (chennai)[04 July 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 35780
என்னதான் அறிவியல் முன்னேற்றங்கள், செல் போன், ஐ போன் வந்தாலும் துணிக் கடை, நகைக் கடைகளில் கூட்டம் நிறைந்து வழிந்தாலும் நமது நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழ் அதாவது ஒரு வேளை கூட முழுமையாக உணவு சாப்பிட முடியாதவர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சன உண்மை. இதற்கு நமதூர் மட்டும் விதி விலக்கில்லை.
"ஊர் இம்ப்ரூவ் ஆயிடுச்சி" மக்களுக்கு சொல்லும் செய்தி என்ன? இந்த மர மண்டைக்கு புரியவில்லையே!
4. எந்த தொழிலும் ..இறைமதிபுக்கு நிகரானது ! posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (YANBU)[05 July 2014] IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35790
பொய்சொல்லக்கூடாது,திருடக்கூடாது,பிச்சைஎடுக்கக்கூடாது இந்த மூன்று குணத்தையும் தாண்டி ஒருவர் தன் பொருளாதரத்தை ஈட்டும் முகமாகவும்,தன் வாழ்கையை மரியாதையுடனும் எவர்முன்னாலும் தலைசொரிந்து
தலைவணங்குவதை விட எந்த தொழிலானாலும்(மார்க்கத்தில் விதிவிலக்கான தொழிலைத்தவிர) தன் உடல் உழைப்பால் செய்கிறேன் என்பதை இப் படம் எத்தனையோ சோம்பேறிகளுக்கும்,சுரண்டி தின்று தன் வாழ்கையை ஓட்டுபவர்களுக்கும் ஓங்கி கன்னத்தில் சுளீரென்று அடித்து சொல்வதுபோல் அமைத்துள்ளது!
ஆமாம் அப்படிபட்ட பிழைப்பு நடத்துபவர்களுக்கு இந்த படம் என்ன, எந்த படமும் எந்த உணர்ச்சியையும் எளிதில் தூண்டிவிடுமா என்ன?
ஒரு பழமொழி சொல்வார்கள் பிற சகோதர இனத்தை சார்ந்தவர்கள் "செய்யும் தொழிலே தெய்வம்" இப்பழமொழியில் நமக்கு உடன்பாடில்லாவிட்டாலும் இதன் உட்கருத்து உண்மையின் எதார்த்தமாவது எந்த தொழில் செய்தாலும்
அத்தொழிலுக்கு இறைவனுக்கொத்த மரியாதையை கொடுக்கவேண்டும் என்ற முக்கியத்துவ கருத்துதான்
இங்கு முன்னிலைப்படுகிறது .அப்படிப்பட்ட தொழில் மரியாதையையும்,முக்கியத்துவத்தையும் நாமும் கடைபிடிக்க வேண்டுமே தவிர கிண்டலடிக்கும் குணத்தை களைந்திட வேண்டும்!.அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
5. Re:... posted byREFAYE (Abudhabi)[05 July 2014] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35795
ஆமாம் "ஊர் இம்ப்ரூவ் ஆயிடுச்சி"
--இப்போ நாங்கள் எல்லாம் LCD,LED TV க்கு மாறியாச்சி அதனால் தற்போது இந்த CRT -TV -க்கு வேலையில்லை ,விலையும் இல்லை , எத்தனையோ , அறிவுகளையும் , கற்பனைகளையும் கண்டு ரசித்த கண்கள் இப்போ புதுமை தேடி அலைவதால் வந்த வினை விற்பனை செய்பவரிடம் செல்கிறது பழைய டிவி யும் கூடவே அமர்ந்த சேரும்.
6. Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[05 July 2014] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35796
அஸ்ஸலாமு அலைக்கும்,
வரலாறு தெரியாத காயளர்கள் பாவம் ...........
அந்த தொலைகாட்சி பெட்டிக்கு உள்ள , பலவித உலோகங்கள் உள்ளது அதனை முறைப்படி பிரித்தால் அதில் விலைமதிப்பான சாதனங்கள் கிடைக்கும் தொழிலாக செய்யும் போது அதன் நுனுக்கங்கள் நமக்கு தெரிய வரும் .
இந்த காட்சியை நமக்கு படிப்பினை இருக்கிறது நம் முந்தைய மக்கள்தான் பயன்படுத்த முடியாத பொருள்களை மக்களிடம் இருந்து வாங்கி அவைகளை அதன் உலோக தன்மைகளின் அடிப்படைகளில் பிரித்து அவற்றை மறு சுழற்சி செய்து அதனை ஒரு முன்மாதிரி துறையாக ஆகிய காட்டியவர்கள். (உங்களுக்கு recycling என்றால் தான் புரியும் என்றால் அதுதான் இது)
நம் முன்னவர்களின் அடிப்படையை கொண்டுதான் பழைய ஓடை , உடைசலை , ஈயம் , பித்தளை வாங்குபவர்களுக்கு காயலான் என்றும் அந்த கடைக்கு காயலான் கடை என்று அழைகளானார்கள் .
இந்த தொழிலில் நல்ல பரகத் இருக்கிறது ஆனால் நம்மவர்கள் இன்று மிக குறைவாகதான் இந்த தொழிலில் இருகிறார்கள்.
நாம் இந்த வியாபாரத்தை தெருவில் விட்டு விட்டது வருத்தமான ஒன்று காரணம் இந்த சிறிய ஆரம்பம்தான் உருக்காலை மற்றும் தொழிற்சாலைக்கு நம்மை இட்டு செல்லும் .
நடுஞ்சளியன் ( நாவலர் ) ஒரு இலக்கிய கூட்டதில் காயலான் கடைக்கு பெயர் காரணத்தை கூறி காயல்பட்டினதார் இந்த நடவடிக்கைகளில் முதலில் இறங்கி இந்த கடைகளை நிறைய இடங்களில் அமைத்து செயல்பட்டதால் அது காயலான் கடை என்று ஆகிவிட்டது என்று விளக்கம் கூறினாய் .
காயலான் எந்த பொருளையும் சீக்கிரம் கழிக்கமாடான்
கழித்தால் அதனை மறு பொருளாக மாற்றும் காரியத்தை செய்து விடுவான் அதுதான் இறைவன் அவனுக்கு கொடுத்துள்ள சிந்தனை ஆற்றல் மற்றும் அதனை நடைமுறைபடுத்தும் முயல்வு .
வரலாறு தெரியாவிட்டால் நாளடைவில் நம் புவீயியலை அழித்து விடுவார்கள் ..............
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross