காயல்பட்டினம் புதுப்பள்ளியில் ஆண்டுதோறும் ரமழான் மாதத்தில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில், நேற்று (ஜூலை 01) பதிவு செய்யப்பட்ட இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள் வருமாறு:-
இஃப்தார் நிகழ்ச்சியில் நாள்தோறும் 30 முதல் 50 பேர் வரை கலந்துகொள்கின்றனர். அவர்களுக்கு, பேரீத்தம்பழம், தண்ணீர், கஞ்சி, வடை உள்ளிட்டவை பரிமாறப்படுகிறது.
நாள்தோறும் மாலையில் வீடுகளுக்காக வினியோகிக்கப்படும் ஊற்றுக் கஞ்சியை, இப்பள்ளி மஹல்லா ஜமாஅத்தைச் சேர்ந்தோர் உட்பட சுமார் 200 குடும்பத்தினர் பெற்றுச் செல்கின்றனர். நகரின் பள்ளிவாசல்களில் பெரும்பாலும் கறிகஞ்சி தயாரிக்கப்படும் இக்காலத்தில், இப்பள்ளியில் மட்டும் பெரும்பாலும் வெண்கஞ்சி தயாரிக்கப்படுவதும், மஹல்லா ஜமாஅத்தைச் சேர்ந்தோர் வெண்கஞ்சி மீது அதிக விருப்பம் கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இப்பள்ளியின் தலைவராக எஸ்.எம்.உஸைர், துணைத்தலைவர்களாக கத்தீபு ஷெய்கு ஸலாஹுத்தீன், எஸ்.எஸ்.எம்.புகாரீ, செயலாளராக ஏ.எஸ்.அஷ்ரஃப், துணைச் செயலாளர்களாக பாளையம் அமீர் அப்துல்லாஹ், பல்லாக் அப்துல் காதிர் நெய்னா, இணைப் பொருளாளர்களாக எஸ்.எம்.பி.செய்யித் உமர் (அ.பு.), எம்.எல்.ஹாரூன் ரஷீத் ஆகியோர் நிர்வாகிகளாகவும், 15 பேர் செயற்குழு உறுப்பினர்களாகவும் சேவையாற்றி வருகின்றனர்.
அன்றாடம் ஐவேளைத் தொழுகைக்கான இமாமாக ஹாஃபிழ் செய்யித் நூஹ், முஅத்தினராக பண்ணை முஹம்மத் காஸிம் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
இப்பள்ளியில் ரமழான் தராவீஹ் சிறப்புத் தொழுகையில் முழு குர்ஆனும் ஓதி முடிக்கப்படுகிறது. மவ்லவீ ஹாஃபிழ் எம்.டி.முஹம்மத் அப்துல் காதிர் நடப்பாண்டு தொழுகையை பொறுப்பேற்று வழிநடத்தி வருகிறார்.
புதுப்பள்ளியில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
புதுப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
புதுப்பள்ளியின் வரலாற்றுத் தகவல்கள் உள்ளிட்ட விபரங்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
நடப்பாண்டு இஃப்தார் நிகழ்ச்சிகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 12:18 / 03.07.2014] |