காயல்பட்டினம் மேலப்பள்ளியில் ஆண்டுதோறும் ரமழான் மாதத்தில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில், நேற்று (ஜூலை 01) பதிவு செய்யப்பட்ட இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள் வருமாறு:-
இஃப்தார் நிகழ்ச்சியில் நாள்தோறும் 10 முதல் 20 பேர் வரை கலந்துகொள்கின்றனர். அவர்களுக்கு, பேரீத்தம்பழம், தண்ணீர், கஞ்சி உள்ளிட்டவை பரிமாறப்படுகிறது.
இப்பள்ளியில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த மவ்லவீ ஷெய்க் அப்துல் காதிர் ஸூஃபீ - இமாமாகவும், முஅத்தினாகவும் பணியாற்றி வருகிறார். நடப்பாண்டு ரமழான் தராவீஹ் தொழுகையையும் இவரே வழிநடத்தி வருகிறார். திருமறை குர்ஆனின் சிறிய அத்தியாயங்கள் தராவீஹ் தொழுகையில் ஓதப்படுகிறது.
இப்பள்ளி, புதுப்பள்ளி நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகிறது. 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த இப்பள்ளி கட்டிடத்தின் கான்க்ரீட் மேற்கூரை தற்போது சிதிலமடைந்து வருகிறது. அவ்வப்போது அதன் பூச்சுகள் உடைந்து விழுவது வாடிக்கையாகிவிட்டது. இதன் காரணமாக, பலவீனமாக உள்ள கான்க்ரீட் பூச்சுகளை பள்ளி நிர்வாகம் பெயர்த்து எடுத்துள்ளது.
புதிய கட்டிடப் பணிக்கான நிதி திரட்டும் முயற்சி துவங்கப்படவுள்ளதாக அறியப்படுகிறது.
மேலப்பள்ளியில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
மேலப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
மேலப்பள்ளியின் வரலாற்றுத் தகவல்கள் உள்ளிட்ட விபரங்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
நடப்பாண்டு இஃப்தார் நிகழ்ச்சிகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளன @ 12:00 / 03.07.2014] |