காயல்பட்டினத்தை சார்ந்தவரும், திருச்சியில் இயங்கிவரும் ஆய்ஷா மருத்துவமனையின் நிறுவனருமான
டாக்டர் எம்.எஸ்.அஷ்ரஃபுக்கு - தமிழக அரசு, 2013ம் ஆண்டின் சிறந்த மருத்துவர் விருதினை வழங்கியுள்ளது.
இவ்விருது - மருத்துவர்கள் தினமான ஜூலை 1 அன்று, சென்னை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு
பன்முக சேவை சிறப்பு மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வழங்கப்பட்டது.
மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் இவ்விருதினை டாக்டர் எம்.எஸ்.அஷ்ரஃப் உட்பட 10
மருத்துவர்களுக்கு வழங்கினார். இவ்விழாவில் சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர்
ஜே.ராதாகிருஷ்ணன் IAS உட்பட இத்துறை அதிகாரிகள் பலர் கலந்துக்கொண்டனர்.
டாக்டர் எம்.எஸ்.அஷ்ரஃப் - 2008ம் ஆண்டில், மத்திய அரசின் பி.சி.ராய் விருது
பெற்றதும், 2011ம் ஆண்டில் இந்திய பொது மருத்துவர்கள் கழகத்தின் (Association of Physicians of India) தமிழ்
நாடு கிளை தலைவராக தேர்வு செய்யப்பட்டதும், தமிழ் நாடு மெடிக்கல்
கவுன்சில் அமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்டதும்
நினைவிருக்கலாம்.
3. Re:...CONGRATULATIONS ! posted byK.M. Seyed Ahamed (Hong Kong)[03 July 2014] IP: 223.*.*.* Hong Kong | Comment Reference Number: 35761
CONGRATULATIONS! DR. ASHRAF kaka FOR BEST PERFORMING DOCTORS AWARD 2013 FROM TAMIL NADU GOVERNMENT. MAY THE BLESSINGS OF ALLAH AND OUR BELOVED PROPHET (May Peace be Upon Him) BE UPON YOU FOR YOUR TREMENDOUS SERVICE TO THE SOCIETY.
MAY ALLAH HELPS YOU TO ACHIEVE MORE MILESTONES BY RENDERING SELFLESS SERVICE TO THE PEOPLE AND SET NEW LANDMARKS IN THE FIELD OF MEDICINE. AAMEEN! WASSALAM,
4. Re:...LOYALTY KINDNESS SINCERITY REWARDED posted bymackie noohuthambi (chennai)[03 July 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 35762
CONGRATULATIONS!
IT IS NOT OUR DR ASHRAFF IS HONOURED. IT IS LOYALTY - KINDNESS - SINCERITY - L.K.S. - IS HONOURED. YET ANOTHER FEATHER ON YOUR CAP WITH FLYING COLOURS.
THE TRADITIONAL NAME LKS GETS A NEW MOMENTUM. WE ARE PROUD OF YOU AND ALL THE CITIZENS OF KAYALPATNAM FEEL THAT THEIR OWN SON IS AWARDED TODAY.
MAY ALLAAH GRANT YOU LONG AND PROSPEROUS LIFE TO SERVE MANKIND. PLEASE ACCEPT MY HEARTFUL AND JOYFUL WISHES.
8. May Allah give bless you with barakah...!!! posted byS.K.Shameemul Islam (Chennai)[03 July 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 35772
May Allah give bless you with barakah. Aameen.
So Long Have A Nice Day.
Shameemul Islam SK
& Family,
LK Colony, Kayalpatnam.
9. Masha Allah posted bySeyed Ibrahim S,R, (Dubai)[03 July 2014] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35773
Masha Allah Dr.Ashraf Mama. An additional feather added to your cap. May Almighty Allah shower his blessings upon you with good health for having a long service in the field of medicine.
12. காயலுக்கு கிடைத்த பெருமை ! posted byK.V.A.T.HABIB (QATAR)[04 July 2014] IP: 37.*.*.* | Comment Reference Number: 35778
எல்லாப்புகழும் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே !
நமதூரின் பெருமையினை மேலும் உயர்த்தும் வண்ணம் டாக்டர் அஷரப் அவர்களுக்கு கிடைத்திருக்கும் இந்த விருது, நம் அனைவருக்கும் கிடைத்த , நமதூருக்கு ஒட்டு மொத்தமாக கிடைத்த விருதாகவே நம்மை நினைக்கத்தோன்றுகிறது. டாக்டர் அஷ்ர ஃ ப் மாமா அவர்களின் மருத்துவ சேவையை பாராட்டி அவர்கள் பல விருதுகளைப் பெற்றிருக் கிறார்கள் . இன்ஷா அல்லாஹ் மேலும் பல விருதுகள் பெற நாம் அனைவரும் து ஆ செய்வோம்.
அவர்களின் மருத்துவ சேவையில் , நான் கண் கூடாக கண்ட உண்மையை இங்கே பகிர்ந்து தான் ஆக வேண்டும். நமதூர் வாசிகள் யார் அவர்களிடம் சென்றாலும் , அவர்கள் தனி மனிதனாக இருந்து , தகுந்த மருத்துவ ஆலோசனைகளை கூறி , உரிய சிகிட்சையை , தரமான நம்பக தகுந்த மருத்துவரை கொண்டு பெறச்செய்து , பூரண நலம் கிடைக்கும் வரை தொடர் ஆலோசனை தொடர்பில் இருந்து வழி காட்டி கொண்டிருக்கிறார்கள். இந்த அவசர உலகில், புகழ் பெற்ற மருத்துவர்கள் ஆற அமர இருந்து , ஆலோசனைகளை வழங்கி , வழி காட்டுபவர்கள் விரல் விட்டு என்னும் அளவுக்கு தான் இருப்பார்கள். அந்த தரமான வரிசையில் , நமது சொந்தம் , டாக்டர் அஷரஃ ப் அவர்கள் முதல் ஆளாக திகழ்கிறார்கள். அவர்களின் சேவையை பாராட்டி கிடைக்கும் விருதுகள் நமதூருக்கே கிடைக்கும் பெருமையாகவே நான் கருதுகிறேன். அவர்களின் ஆரோக்கியத்துக்கும் ,நீடித்த வளமான வாழ்வுக்கும் ,அவர்களின் குடும்ப நலத்துக்கும் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன். அவர்களின் சமுதாய சேவை , மருத்துவ சேவை தொடர வல்ல ரஹ்மான் எல்லா வகையிலும் துணை புரியட்டும். வாழ்த்த வயதில்லை என்றாலும் , து ஆ செய்கிறேன் .
பொது சேவையில் இவர்களைப்போன்றே நமதூரின் எல்லா
டாக்டர்களும் ஈடுபட வேண்டும் எண்ணம் உருவாக வேண்டும் . அதற்காகவே , நமது டாக்டர் அவர்களை நமதூரின் அனைத்து ஜமா அத் , சங்கங்கள் , பொதுநல அமைப்புகள் , வெளியூர் மற்றும் வெளிநாட்டு காயல் நல மன்றங்கள் ஒருங்கே இணைந்து, அவர்களுக்கு பாராட்டு விழா எடுப்போமேயானால் , அது நமதூரின் வருங்கால டாக்டர்களுக்கு ஒரு தூண்டுகோலாகவும் , மருத்துவ சேவையோடு இணைந்த பொது நலம் பேணவேண்டும் என்ற எண்ணத்தை மற்ற இளம் மருத்துவர்களின் மனதில் உண்டாக்கும் வண்ணம் ,அவர்களின் மருத்துவ வாழ்வில் துளிர் விடும் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை. அத்தோடு , டாக்டர் அவர்களை இந்த சமுதாயம் நன்றி உணர்வோடு , பெருமையோடு கவுரவ படுத்திய மகிழ்வும் , நிறைவும் ஏற்படும் . இதை அனைத்து ஜமாஅத் பொதுநல அமைப்புகள் ஆகிய உங்கள் அனைவரின் சிந்தனைக்கும் அன்போடு வைக்கிறேன் .
13. Re:...KVAT HABEEB - YOU BE THE PIONEER posted bymackie noohuthambi (chennai)[04 July 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 35784
KVAT ஹபீப் அவர்களின் சிந்தனை ஓட்டம் பாராட்டுக்குரியது.
நமது நாட்டில் சாதனை புரிந்தவர்களுக்கு அவர்கள் நம்மை விட்டு பிரிந்த பிறகு அல்லது அவர் 90 -95 வயதை அடைந்த பிறகு "பாரத ரத்னா" என்ற இந்தியாவின் மிகப் பெருமை மிக்க விருதை வழங்குவார்கள். இதில் விதி விலக்காக, தப்பி தவறி அரசியல் நோக்கத்துக்காக முன் கூட்டியே சிலருக்கு வழங்கப்படுவதும் சில நேரங்களில் அதிசயமாக நடந்து விடும்.விதிவிலக்குகள் வழிகாட்டி ஆகாது .
"நான் மறைந்த பிறகு எனக்கு ஒரு தாஜ்மஹால் கட்ட வேண்டாம். நாம் வாழும் காலத்தில் நான் ஒதுங்கிகொள்ள ஒரு குடிசை கட்டி தந்தால் போதும்" என்று ஒரு புது கவிதை சொல்கிறது. எனவே நண்பர் ஹபீப் முஹம்மது அவர்கள் KVAT அறக்கட்டளை சார்பாக மாண்புமிகு மருத்துவர் - நமது மண்ணின் மைந்தர் அஷ்ரப் அவர்களுக்கு ஒரு பாராட்டு விழாவை ரமலான் பெருநாள் தினத்தில் (எல்லோரும் ஊரில் இருக்கும் காலம் )இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யலாம்.
"நீ நடப்பதற்கு பாதை தேடாதே, நீ நடந்தால் அதுவே பாதையாகி விடும் "என்று ஒரு அறிஞர் சொல்கிறார். அது நிதர்சனமான உண்மை என்பதை நாம் எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம் நம் காலடி சுவடுகள் பட்டு எத்தனை ஒற்றைஅடி பாதைகள் உருவாக்கி இருக்கின்றன. மறுக்க முடியுமா..நல்லவை செய்வதற்கு நாள் நட்சத்திரம் பார்க்க தேவை இல்லை.முந்திக் கொள்ளுங்கள். உங்களுக்கும் பெருமை உங்கள் பாராட்டு விழாவால் இந்த ஊருக்கும் பெருமை.
PLEASE GET PRIOR "APPOINTMENT" WITH DR ASHRAF TO AVOID "DISAPPOINTMENT".
15. Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[05 July 2014] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35794
அஸ்ஸலாமு அலைக்கும்,
தமிழக அரசின் சிறந்த மருதுவர் விருது பெற்ற நம்
ஜனாப் அஷ்ரப் டாக்டர் அவர்கள் தங்கள் மருத்துவ பணிகளுக்கு கொடுக்கும் முக்கியதுவத்தை அதுசார்ந்த சேவைகளுக்கும் நல்ல தன் பங்களிப்புகளை தவறாமல் கொடுத்து வருபவர் .
சில வருடங்களுக்கு முன்பு பீ. சி. ராய் விருதினையும் இவர் பெற்றது நமக்கு நல்ல மகிழ்சியாக அமைந்தது இந்திய மருத்துவ துறைகளில் மிக முக்கிய விருது அது என்பது நாம் அறிந்தது .
இந்திய மருத்துவ துறையில் டாக்டர் அஷ்ரப் பதித்த
முத்திரை என்பது ஒரு நிலையான சுவடுகள் போன்றது இன்ஷா அல்லாஹ் என்றும் நிலைத்து இருக்கும் .
தான் மருத்துவ சங்க பொறுப்புகளில் இருக்கும் போதும் அதில் இல்லாத போதும் தங்கள் ஆதரவை அந்த அமைப்புக்கும் பொது மக்களுக்கும் சிறப்பாக தொடர்ந்து செய்து வருபவர்கள். நாங்கள் அவர்கள் தலைமைகளில் நடந்த பல மருத்துவ மாநாடுகள் நடந்த போது தனார்வ தொண்டு செய்யும் பணிகளில் எங்களை ஈடுபட செய்து வாய்ப்புகளை வழங்கியவர்கள் அவைகள் நல்ல தலைமை பண்புகளும் சேவை ஆர்வத்தையும் கொடுத்தது .
வல்ல நாயன் அவர்களின் நலமான காரியங்களை இன்னும் நல்ல நிலையாக தொடர்ந்து செய்ய போதுமான அணைத்து உதவிகளையும் செய்ய போதுமானவன் .
நம் ஊர் இளம் மருத்துவர்கள் மற்றும் அணைத்து மருத்துவர்களும் இணைந்து ஒரு சிறப்பான அமர்விற்கு வழிவகை செய்தால் அந்த கலந்தாய்வு அனைவர்க்கும் நல்ல நலனை கொடுக்கும் என்பது உண்மை இந்த நிகழ்சிகளில் அவருடைய அனுபவங்களை நாம் பகிர முடியும் இதில் பள்ளி மாணவ , மாணவிகளையும் தனார்வ மக்களையும் கலந்து கொள்ள செய்வது மேலும் சிறந்த தாகத்தை கொடுக்கும் .
விருதுகள் என்பது மைல் கற்கள் போன்றது உங்கள் பயணம் முழுதும் நிறைய இது போன்ற விருதுகளை நட்டு கொண்டு
செல்ல வேண்டும் என்பது எங்கள் விருப்வமும் துஆவும் இது போன்ற நம் மக்கள் அடையும் அங்கீகார நிலைகள் நம் அனைவரின் மனதிலும் நல்ல தாகத்தை கொண்டு வர சிறந்த தருணங்கள் தொடரட்டும் உங்கள் மருத்துவ மற்றும் சமூக சேவைகள் வாழ்த்துக்கள் ............
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross