நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட தன்னை வெற்றிபெறச் செய்தமைக்காக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக, தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, 28.06.2014 அன்று காயல்பட்டினம் வருகை தந்தார்.
துவக்கமாக, ஸாஹிப் அப்பா தைக்காவுக்கு சென்று பிரார்த்தனையில் கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து, பிரதான வீதி, எல்.கே.லெப்பைத்தம்பி சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகளில் நகர்வலமாகச் சென்று அவர் வாக்காளர்களுக்கு நன்றி கூறினார்.
முன்னதாக, காயல்பட்டினம் வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், அதிமுக காயல்பட்டினம் நகர கிளை துணைச் செயலாளர் ஷேக் அப்துல் காதர், நகர்மன்ற உறுப்பினர் ஜெ.அந்தோணி, என்.எம்.அகமது உள்ளிட்ட நிர்வாகிகளும் அங்கத்தினரும் வரவேற்பளித்ததோடு, நன்றியறிவிப்பு நகர்வலத்திலும் இணைந்து சென்றனர்.
படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ
மற்றும்
A.R.ஷேக் முஹம்மத்
அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |