சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி வகுப்பில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாணவ-மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்து, அம்மன்றத்தின் துணைச் செயலாளர் எம்.எம்.செய்யித் இஸ்மாஈல் வெளியிட்டுள்ள அறிக்கை:-
தற்போதைய கால கட்டத்தில் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு ஆங்கிலம் பேசக்கற்றுக் கொள்வதென்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்று.
ஆங்கிலம் சரளமாக பேசத் தெரியாததால் கடந்த தலைமுறையினர் படும் பாட்டையும், இன்றைய தலைமுறையினர் படும் பாட்டையும் நாமறிவோம். அது மட்டுமல்ல ஏராளமான மாணவர்கள் தமக்குள் திறமையிருந்தும் ஆங்கிலம் பேசத்தெரியாததால் கல்லூரிகளில் பின்னடைவை சந்திப்பதையும், பட்டப்படிப்பை முடித்து விட்டு பணிக்குச் செல்கையில் நேர்காணலில் (Interview) தோல்வியடைந்து மனம் வருந்துவதையும், பணிசெய்யும் நிறுவனங்களில் பணி (promotion) கிடைப்பதற்கு ஆங்கிலம் பேசத் தெரியாதது தடையாக இருந்து வருவதையும் காணமுடிகிறது.
இந்த அவல நிலை வருங்கால சமுதாயத்திற்கு ஏற்படக் கூடாது என்பதை மனதிற்கொண்டு தம்மாம் காயல் நற்பணி மன்றம் & இக்ராஃ கல்விச் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் 2014 SUMMER SPOKEN ENGLISH COACHING PROGRAM (மாணவ- மாணவியர்களுக்கு தனித்தனியாக பயிற்சி வகுப்புகள்) கடந்த கோடை விடுமுறையில் நடத்தியது.இதில் ஏராளமான மாணவ மாணவியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
இந்த கோடை கால ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி வகுப்பு கடந்த 28-04-2014 முதல் 28-05-2014 வரை ஒரு மாத காலம் நடைபெற்றது. இதில் மாணவர்களுக்கு காலை 9:15 முதல் 11:15 வரை மற்றும்11:30 முதல் மதியம் 01:30 வரை இரண்டு கட்டங்களாக பைபாஸ் சாலையில் உள்ள நுஸ்கியார் முதியோர் இல்ல அரங்கிலும், மாணவியருக்கு காலை 10 மணி முதல் 12 மணி வரை சொளுக்கார் தெருவிலுள்ள காயல்பட்டினம் சமுதாயக் கல்லூரியிலும்,மதியம் 2 மணி முதல் 4 மணி வரை தைக்கா தெருவிலுள்ள ஆயிஷா நலைன் அவர்களது இல்லத்தின் ஆங்கிலப் பயிற்சி வகுப்பறையிலும் நடை பெற்றது.
இதில் 100 -க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர்கள் பதிவு செய்து கலந்து கொண்டனர். இதில் 47 மாணவர்களும், 41 மாணவியர்களும் சீரான வருகை புரிந்து சான்றிதழ் பெற்றனர்.
இந்த 2014 SUMMER SPOKEN ENGLISH COACHING CLASSஇல் கலந்து பயனடைந்த மாணவ-மாணவியர்களை ஊக்கப்படுத்தி, அவர்களுக்கு சான்றிதழ் (Course complete certificate) வழங்கும் நிகழ்ச்சி 30-05-2014 அன்று மாலை 5 மணியளவில் சொளுக்கார் தெருவிலுள்ள காயல்பட்டினம் சமுதாயக் கல்லூரியில் வைத்து நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு ஹாஜி T.A.S.முஹம்மது அபூபக்கர் அவர்கள் (Lions Club district chair person) தலைமை வகித்தார்கள்.
திருமதி A.வஹிதா அவர்கள் (கவுரவச் செயலாளர்,தூத்துக்குடி மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவிச் சங்கம்), ஹாஜி S.M.M.ஸதக்கத்துல்லாஹ் அவர்கள் (துணைத்தலைவர், KMT மருத்துவமனை) மற்றும் ஆசிரியர் M.A.புஹாரி அவர்கள் (முதல்வர், காயல்பட்டினம் சமுதாயக் கல்லூரி) முன்னிலை வகித்தனர்.
மாணவர் மஹ்மூது நெயினா இறைமறை ஓதினார்.தம்மாம் காயல்நற்பணி மன்றத்தின் துணைச் செயலர எம்.எம்.செய்யது இஸ்மாயில் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.அதன் செயற்குழு உறுப்பினர் O.F.ஷாதுலி வரவேற்புரையாற்றினார்.அதனைத்தொடர்ந்து ஹாஜி T.A.S.முஹம்மது அபூபக்கர் அவர்கள் தலைமையுரையாற்றினார்கள். அதில் இந்த SPOKEN ENGLISH COACHING CLASS குறித்தும்,தற்போதைய கால கட்டத்தில் ஆங்கிலம் சரளமாக பேசத்தெரிந்திருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்கு பாராட்டு தெரிவித்தும் பேசினார்கள்.அதனைத் தொடர்ந்து ஹாஜி காக்கா என்ற S.M.M.ஸதக்கத்துல்லாஹ் அவர்கள் அழகானதோர் கருத்துரை வழங்கினார்கள்.
அதனைத்தொடர்ந்து இந்த 2014 SUMMER SPOKEN ENGLISH COACHING CLASS நடத்திய திரு R.உதயவேல், திரு ஜெய சுஜி, செல்வி ராதா,மற்றும் திருமதி ஆயிஷா நலைன் ஆகியோருக்கு நினைவுப்பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஆதித்தனார் கல்லூரியின் ஆங்கிலத் துறைத்தலைவர் டாக்டர் R.பாபு கிருபாநிதி M.A.,P.hd அவர்கள் கைச்சான்றிட்ட சான்றிதழ்கள்(Course complete certificate) மாணவ-மாணவியர்களுக்கு வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.மாணவர்களுக்கான சான்றிதழ்களை ஹாஜி T.A.S.முஹம்மது அபூபக்கர், ஹாஜி S.M.M.ஸதக்கத்துல்லாஹ்,ஆசிரியர் M.A.புஹாரி ஆகியோரும், மாணவிகளுக்கான சான்றிதழ்களை திருமதி A.வஹிதா அவர்களும் வழங்கி பாராட்டினார்கள்.
அதனைத் தொடர்ந்து சான்றிதழ் பெற்ற மாணவர்களில் அம்மார் மற்றும் விக்னேஷ் ஆகியோரும்,மானவியர்களில் பாளையம் நஃபீஸத் ஆமினா, செல்வ பவானி, கதீஜா, ஷெரின் மீரா ஆகியோரும் ஆங்கிலத்தில் பேசினர். இந்த spoken English course தங்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமைந்திருந்ததாகவும், துவக்கத்தில் தாங்கள் ஆங்கிலம் பேச (conversation) மிகவும் தயங்கியதாகவும், வெட்கப்பட்டதாகவும், ஆனால் தற்போது அந்த தயக்கம் மாறி தைரியமாக ஆங்கிலம் பேச முடிவதாகவும், இதனை ஏற்பாடு செய்த தம்மாம் காயல் நற்பணி மன்றத்திற்கும், இக்ராஃ கல்விச் சங்கத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கருத்து தெரிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவரும்,தூத்துக்குடி மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவிச் சங்கத்தின் கவுரவச் செயலாளருமான திருமதி A.வஹிதா B.Sc., அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.அப்போது இது அருமையானதோர் நிகழ்ச்சி என்றும்,தற்போதைய கால கட்டத்திற்கு அவசியமான ஒரு ஏற்பாடு என்றும், இது கோடை விடுமுறை காலத்தில் மட்டுமின்றி, நிரந்தரமாக நடத்திட முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும், இதற்கான ஏற்பாடுகளை செய்த தம்மாம் காயல் நற்பணி மன்றம் மற்றும் இக்ராஃ கல்விச் சங்கம் நிர்வாகிகளுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துக்கொள்வதாக கூறி முடித்தார்.நிகழ்ச்சியின் இறுதியாக இக்ராஃ கல்விச் சங்கத்தின் நிர்வாகி A.தர்வேஷ் முஹம்மது நன்றியுரையாற்றினார்.
இரவு 06:45 மணியளவில் கஃப்பாராவுடன் இனிதே இந்த நிகழ்ச்சி நிறைவுற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ-மாணவியரும்,பெற்றோர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். Alhamdu lillah.
இவ்வாறு, தம்மாம் காயல் நற்பணி மன்ற துணைச் செயலாளர் எம்.எம்.செய்யித் இஸ்மாஈல் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தம்மாம் காயல் நற்பணி மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |