தமிழகத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகளின் அனைத்து இடங்களுக்கும் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளின் பெருவாரியான இடங்களுக்கும் ஒற்றை சாளர முறையில் (SINGLE WINDOW COUNSELLING) மாணவர்கள் சேர்கை ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்றுவருகிறது.
அண்ணா பல்கலைகழகத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெறும் இந்த சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மே 3 முதல் மே 27 வரை வழங்கப்பட்டன.
ஜூன் 27 அன்று துவங்கயிருந்த கலந்தாய்வுகள், உச்ச நீதி மன்றத்தின் உத்தரவின் பெயரில் ஒத்திவைக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு ஒப்புதல் வழங்கும் AICTE அமைப்பு, பல புதிய கல்லூரிகளுக்கு ஒப்புதல் வழங்காமல் இருப்பதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் - இந்த உத்தரவை, உச்சநீதி மன்றம் வெளியிட்டிருந்தது.
தற்போது கலந்தாய்வு, ஜூலை 7 அன்று துவங்கும் என்றும், இது குறித்த விபரம் ஒவ்வொரு மாணவருக்கும் குறுஞ்செய்தி (SMS) மூலம் அனுப்பப்படும் என்றும், இணையதளத்திலும் ஒவ்வொரு மாணவருக்கான மாற்றியமைக்கப்பட்ட கலந்தாய்வு தேதி வெளியிடப்படும் என்றும், அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரிகள் அனுமதி பிரிவு (TNEA) சார்பாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
|