செய்தி: இந்திய பொருளாதாரம் வலிமை பெற இஸ்லாமிய வங்கி முறை அவசியம்! ஜன்சேவா துவக்க விழா பொதுக்கூட்டத்தில், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான் பேச்சு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வட்டியை வெறுப்பவர்கள் முயற்சி செய்தால் இவ்வங்கி நல்ல நிலைக்கு வரும்... posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[29 June 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 35690
நாம் நமது மாத வருவாயை பிற வங்கியில் சேமித்து அந்த வங்கி நமது சேமிப்பு பணத்தை வைத்து வட்டிக்கு விட நாம் ஏன் காரணமாக இருக்கவேண்டும்.. (இப்படி ஒரு நல்ல வங்கி நகரில் ஆரம்பத்தில் இல்லாமல் இருந்த காரணத்தினால் நமக்கு வேறு பாதுகாப்புக்கு வழியில்லை ஆகையால் பிற வங்கியில் நமது சேமிப்பை வைத்திருந்தோம் அவ்வங்கி நமது பணத்தை பிறருக்கு வட்டிக்கு கொடுத்து கொளுத்து வந்தது - அது கடந்த காலம்)
தற்போது நமக்கு நம் பணத்தை வட்டியின் பக்கம் தொடர செய்யாமல் இருக்க நாம் இந்த வட்டியில்லா வங்கியில் சேமிப்பு தொடங்கி இவ்வங்கியை வலுபெற செய்வது நமது கடமை.. இதனால் பல வியாபார பெருமக்கள் நமது சேமிப்பு பணத்தால் பயனும் பெறுகிறார்கள்.
குறிப்பாக நாம் ஒன்றிணைந்து (வட்டியை வெறுக்கும்) ஒரே சிந்தனையில் கவனம் செலுத்தினோம் என்றால் இவ்வங்கி இன்ஷா அல்லாஹ் விரைவில் இந்தியாவில் பல கிளைகளுடன் நற்பெயர் பெற்று விளங்கும் அதில் சந்தேகமில்லை.
பிற ஒருவன் / நிறுவனம் வட்டியில் கொழுக்க நாம் ஏன் நமது ஹலாலான பணத்தை பிற வங்கியில் ஏன் சேமிக்கணும்... இனி வேண்டாம்..
நகரில் நாம் அனைவரும் விரைவில் இவ்வங்கியில் சேமிப்பை தொடங்குவோமாக...!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross