செய்தி: ரமழான் 1435: பிறை தென்பட்ட தகவல்கள் கிடைக்காததால், இன்று நோன்பு இல்லை! மஹ்ழரா, ஜாவியா உலமாக்கள் கூட்டுக்கூட்டத்தில் அறிவிப்பு!! (இறுதிச் செய்தி!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வதூத் சாஹிப் அவர்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக !
மனிதன் மிக இலகுவாக படைக்கப்பட்டுள்ளான், தன்னுடைய நியாயங்களை தெளிவு படுத்துவதில் உலகின் எந்த மூளைக்கு சென்றேனும் எப்படிப்பட்ட சந்தர்ப்பத்திலும் ஆதாரங்களை தேடிப்பிடித்து நிலைநிறுத்துவதில் வல்லவன்.
இஸ்லாம் மார்க்கம் மிக இலகுவானது , நம் உயிரினும் மேலான நபிகளார் (ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்) அவர்கள் அப்படித்தான் போதித்து கொடுத்தார்கள். நமக்கு மட்டுமானது அல்ல அவனுடைய ஏடும், நபிகளாரின்(ஸல்,,,) வழிகாட்டுதலும். அது அனைவராலும் இலகுவாக ஏற்றுக்கொள்ளக்கூடிய நடைமுறை சாத்தியகூறுகள் நிறைந்தவை.
அக்காலத்து உலமாக்கள் தவறு செய்தவன் தன் சொந்த பிள்ளையாக இருந்தாலும் தண்டிக்க தவறியதில்லை. ஆனால் இக்காலத்தில் அப்படி காண்பது அரிதிலும் அரிது என்பது என்னுடைய கருத்து,
பித்னாக்கள் நிறைந்த இந்த உலகில் எதற்கு எடுத்தாலும் தன் சொந்த கருத்தை (ஊனமானதாக இருந்தாலும்) நிலை நாட்டுவதில் முன்னோர்களை பழி தீர்ப்பதே ஒரு நடைமுறை கொள்கையாக வழி நடத்தி செல்லும் உலமாக்களும்
இல்லை என்கிற ஆதாரம் வதூத் சாஹிப் அவர்களிடம் உண்டா ?
( இசைக்கு ஆதாரம், வட்டிக்கு ஆதாரம் (ஷரியத் பைனான்ஸ்), இன்னும் ஏனைய ,,,,,)
சர்வதேச லிமிடெட் கம்பனிகளை விடுங்கள் -அவர்கள் கார்பரேட்
என்னும் கொள்கையில் உள்ளவர்கள் தங்களுக்கு வேண்டியபடிக்கு விதிமுறைகளை தளர்த்திக்கொள்ளலாம்- நம் குடிலுக்கு வருவோம் முந்தய உலமாக்களால் எடுக்கப்பட்ட தீர்ப்புகள் பழைய ஏற்பாடா? இப்போது புதிய ஏற்பாடு பிறந்துள்ளதா?
நல்ல கருத்துகளை யார் எந்த புறத்திலிருந்து சொன்னாலும் அதை ஏற்று நடைமுறை படுத்தக்கூடிய வலிமையை நம் மனதில் ஏற்ப்படுத்தி கொள்ளவேண்டும் அது எந்த பிரிவு உலமாவாக இருந்தாலும் சரியே என்பது என்னுடைய கருத்து.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross