Re:...புன்சிரிப்பும் உபசரிப்பும் posted bymackie noohuthambi (chennai)[02 July 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 35744
புன்சிரிப்பையும் உபசரிப்பையும் தங்கள் வாழ்வியலாக கொண்ட மக்கள் வாழும் நாடு. வந்தாரை வாழ வைத்து அதிலே இன்பம் காணும் முஸ்லிம்கள் வாழும் நாட்டில் முஸ்லிம்களுக்கு வந்த சோதனை வேதனை அளிக்கிறது. இப்படி ஒரு கோரிக்கை வருவது கூட நெஞ்சம் கலங்க வைக்கிறது. இலங்கை வரைபடத்தில் இது ஒரு கரும்புள்ளி.
பாரி வள்ளலுக்கு உதவியா செத்தும் கொடை கொடுத்த சீதக்காதி வள்ளலுக்கு ஒரு தேவையா...அள்ளி அள்ளிக் கொடுத்து நாடு செழிக்க ஊர் செழிக்க மக்கள் கல்வி செழிக்க தனது பொருளை செலவிட்டு அதிலே இன்பமும் திருப்தியும் கண்ட நளீம் ஹாஜியார் போன்ற எண்ணற்ற கொடை உள்ளம் கொண்டவர்கள் வாழ்ந்த முஸ்லிம்கள் ஊர்களுக்கு ஒரு சோதனையா...
வள்ளல்களுக்கெல்லாம் வள்ளலான அல்லாஹ் இந்த நாட்டை மீண்டும் வளமாக்குவான்...இழந்த பொருள்களுக்கும் உடமைகளுக்கும் நினையாப் புறத்திலிருந்து செல்வங்கள் இந்த மக்களுக்கு வந்து சேரும்.சாதாரண மக்கள் இந்த இழப்புக்கு உதவி செய்து இவர்களை திருப்தி படுத்த இயலாது. சவூதி அரேபியா, வளை குடா நாடுகள் கடைக் கண் பார்வை இந்த முஸ்லிம்கள் பக்கம் திரும்பினால் மட்டுமே இந்த இழப்புகளை ஈடு செய்ய முடியும் .
என்றாலும் ஒரு அணில் கூட மண் சுமந்து இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இணைப்பு பாலம் அமைக்க உதவி செய்து, தன உதவும் தன்மையை வெளிப்படுதியதாம். அந்த வகையில் என்போன்றவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று ஒரு தெளிவான் திட்டத்தை காவாலங்கா எங்களுக்கு அறிவித்தால் அதனை உடன் செய்ய காத்திருக்கிறோம்.
உதவி வரைத்தன்று உதவி. உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து.
தங்கள் துயரில் பங்கு கொள்ளும்
மக்கி நூஹுதம்பி
மின்னஞ்சல்:mackiealim97@gmail.com
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross