CFFC செயல்படும் நோக்கம் புரிகிறதா? posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[26 March 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 3576
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
கடையில் விற்கப்படும் எண்ணெய்களில் கலப்படம் இருப்பதாக CFFC கண்டுபிடித்திருப்பது நல்ல செய்தி.
நெய்யில் வனஸ்பதி (டால்டா) கலந்திருப்பதாக கண்டுபிடித்திருப்பது ஒருபுறமிருக்கட்டும். கடலை எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய்யிலும் எதை கலந்திருக்கிறார்கள் என்பதை தெரியபடுத்தினால் மக்கள் விழிப்புணர்வு பெறுவார்கள்.
அவர்கள் கடையில் உள்ள மற்ற உணவுப் பொருட்களையும் தரம் பற்றிய சோதனை செய்திடல், காலாவதியாகும் தேதியை சோதித்தல் போன்றவைகளை பரிசோதித்து அவைகளில் மிகுந்த பாதிப்புக்கள் ஏதுமிருந்தால் உடனே சட்டப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க ஏற்பாடு செய்யவும்.
சாதாரண பாதிப்புக்கள்தான் என்று இருக்கும் பட்சத்தில் இந்த கடையின் பெயரை வெளியிடுவதற்கு முன் அவர்களுக்கு எழுத்துப்பூர்வமான எச்சரிக்கையை கொடுத்து உடனே கலப்பட பொருட்கள் அழிக்கப்பட வேண்டும் அல்லது அப்புறப்படுத்தப்பட வேண்டும்.
அந்த எச்சரிக்கையை அவர்கள் ஏற்று அப்பொருட்களை உடனே அகற்றினால் நல்லது. மீறும் பட்சத்தில் அவர்களின் கடை பெயரை பொதுமக்களுக்கு பல வகையிலும் சென்றடையுமாறு விளம்பரப்படுத்தி, விழிப்புணர்ச்சியை உண்டாக்கி அவர்களின் வியாபாரத்திற்கு முற்றுபுள்ளி வைக்கவும்.
------------------------------------
மற்றக்கடைகளிலும் பரிசோதனைகளை தொடங்கி இருக்கலாம் அல்லது விரைவில் தொடங்குவது நல்லது.
கலப்படம் செய்வதால்தான் ஒரு சில கடைகளில் விலை குறைவாக கொடுக்கிறார்கள் என்பதை மக்கள் இன்று உணர்ந்திருப்பார்கள்.
மேலும் ஊரிலிருந்து சில மக்கள் ஏரல் சென்று, விலை மலிவு என்று வாங்கி வரும் அத்தனையும் கலப்படம்தான் என்பதையும் மக்கள் உணர வேண்டும்.
-------------------------------------------
பொது மக்களே!
CFFC செயல்படும் நோக்கம் புரிகிறதா?
பலசரக்கடையில் கலப்படத்தை கண்டுபிடிக்க இப்போதுதான் தொடங்கி இருக்கிறார்கள் இது ஆரம்பம் மட்டுமே.
இன்னும் எத்தனையோ கடைகள், என்னென்ன சோதனைகள் இருக்கிறது.
மருந்துக்கடைகள், ஹோட்டல்கள், கறிக்கடை, மீன் மார்கெட், இன்னும் பல உண்டு.
மேலும் மொபைல் டவர், DCW கழிவு நீர், காற்றுப் புகை இப்படி பலவகையான புற்று நோய் மற்றும் கொடிய நோய்களுக்கு காரணியாக இருக்கும் அத்தனையையும் சோதித்து கண்டு பிடித்து நம் மக்களையும், ஊரையும் - சுகமானவர்களாகவும், சுகாதாரமானவையாகவும் வைக்க வேண்டும் என்பதே.
ஆகவே பொது மக்களாகிய நாம்தான் CFFCயின் செயல்களுக்கு எல்லா வகையிலும் முழு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்.
மேலும் பல, பல பரிசோதனைகள் செய்து கலப்படங்களை கண்டுபிடிக்க வேண்டியது உள்ளதால் அவரவர்களுக்கு இயன்ற பொருளுதவியையும் செய்ய வேண்டியது நமது கடமையாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ்! CFFC யின் பணியை தொய்வின்றி நடைபெற்று வெற்றியடைய செய்வானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross