செய்தி: ரமழானை முன்னிட்டு சிங்கை, அபூதபீ கா.ந.மன்றங்கள் இணைந்து, ரூ. 3.25 லட்சம் மதிப்பில் 120 பயனாளிகளுக்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...அழகிய முன்மாதிரி posted bymackie noohuthambi (chennai)[06 July 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 35825
ஏழைகளை தெரு தெருவாக அலைந்து இஸ்லாமிய சமுதாயம் ரமலானில் கையேந்தி திரியும் அவல நிலையை எல்லா ஊர்களிலும் காண்கிறோம். அதுவும் புனித லைலதுல் கதர் நாளில் ஏழைகள் வீடு வீடாக திரிவதும், பணக்காரர்கள் அவர்கள் வீட்டு கதவுகளை திறந்து வைத்து "வாரி வாரி வழங்கும்" அவல நிலையும் நம் ஊருக்கும் புதிதல்ல.
இந்த தலைமுறை - புதிய தலைமுறையின் சிந்தனை ஓட்டம் இவற்றிலிருந்து மாறுபட்டு, வேறுபட்டு, நபிகள் நாயகம் சொன்ன வழியில், ஏழைகள் வீடு தேடி சென்று அவர்களுக்கு தேவையான பொருள்களை வழங்க ஏற்பாடு செய்வது மனதுக்கு மகிழ்ச்சி தருகிறது. எங்கள் முன்னோர்கள் இபபடித்தான் செய்தார்கள் என்று பிடிவாதமாக இருக்காமல் கால மாற்றத்தின் சூழல் அறிந்து செயல்படும் இந்த இளைஞர் மன்றங்களுக்கு - காயல் நல மன்றங்களுக்கு எங்கள் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள்.
இதேபோல் பெருநாள் நாட்களிலும் நாம் வீட்டில் ருசியாக உண்டு கழிக்கும்போது ஏழைகள் வந்தால் அவர்களை விரட்டும் வழக்கமும் நம்மிடையே உள்ளது, திருமண வீடுகளில் ஏழைகள் வந்தால், எங்கள் களரி முடிந்த பிறகுதான் உங்களுக்கு சாப்பாடு என்று அவர்களை துரத்தும் வழக்கமும் நம்மிடையே உள்ளது. இந்த நிலைகளையும் நாம் மாற்றி ஏழைகளுக்கு முன்னுரிமை கொடுத்து நமது எல்லா நிகழ்ச்சிகளையும் அமைத்துக் கொண்டால், அல்லாஹ் நமது தர்மங்களுக்கு - அமல்களுக்கு அதிக நன்மைகள் தருவான்.
நான் பசியுடன் வந்தேன் எனக்கு நீ உணவு அழித்தாயா..நான் தாகத்துடன் வந்தேன் நீ என் தாகம் தீர்த்தாயா ..நான் நோயாளியாக வந்தேன், நீ என் நோய் தீர்த்தாயா என்று மறுமையிலே அல்லாஹ் கேட்கும்போது நாம் "ஆம்" என்று தலை நிமிர்ந்து சொல்வதற்கு இந்த ஏழைகள்தான் சாட்சியாக இருப்பார்கள்.
இதைத்தான் "ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் " என்றும் "வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்" என்றும் தமிழுலகம் கூறுகிறதோ...
புதிய தலைமுறை முதிய தலைமுறைக்கு வழிகாட்டுகிறது...வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross