Re:...மரணம் எப்போது வரும் சொல்லுங்கள்... posted bymackie noohuthambi (chennai)[06 July 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 35831
அது ஒரு தப்லீக் ஜமாஅத் கூட்டம்.
அல்லாஹ்வுடைய பாதையில் புறப்பட 4 மாதம் பெயர் கொடுப்பவர்கள் எழுந்து நில்லுங்கள். நிசப்தம்.
40 நாட்கள் பெயர் கொடுப்பவர்கள் எழுந்து நில்லுங்கள். அமைதி. சரி, பக்கத்துக்கு ஊர் குரும்பூர், ஆத்தூர், கேம்பலாபத் 3 நாட்கள் பெயர் கொடுப்பவர்கள் எழுந்திருங்கள். இப்போது 5-6 பேர் எழுந்து நிற்கிறார்கள். எல்லோரும் உட்காருங்கள்.
"நான் எனக்கு மௌத் வருமுன் ஒருமுறை அல்லாஹ்வுடைய பாதையில் போவேன் என்பவர்கள் கை உயர்த்துங்கள்". எல்லோரும் இப்போது உஷாராக கை உயர்த்துகிறார்கள்.
சரி, இப்போது சொல்லுங்கள் யார் யாருக்கு எப்போது மௌத்து வரும் என்று சொல்லுங்கள். மயான அமைதி ஒரு பக்கம். அவரவர்களை சிந்திக்க தூண்டும் நெற்றியடி மறுபக்கம். இப்படித்தான் புகாரி ஹாஜி அவர்கள் நம்மை அல்லாஹ்வுடைய பாதையில் போக அல்ல - அவனது குத்ரத்களை பற்றி சிந்திக்க வைத்தார்கள்.
KMT மருத்துவமனை அமைவதற்கு முழு முதல் காரணமாக இருந்தது அவர்களின் பொது நல நோக்கு. பெண்கள் வெளியூருக்கு இப்படி அடித்து பிடித்து கொண்டு பேருந்தில் போக வேண்டி இருக்கிறதே என்ற கவலை அவர்கள் உள்ளத்தில் படர்ந்தபோது அவர்கள் மக்களிடம் மஷூரா பண்ணி அதன் அடிப்படையில் உருவானதுதான் அது.
ஆத்தூர் மத்ரசாவாகட்டும். ஜாவியா நிர்வாகமாகட்டும் எல்லாமே கலந்தாய்வு மூலம் தான் முடிவு செய்வார்கள். சிறிய விஷயம் முதல் பெரிய முக்கிய முடிவுகள் எல்லாமே அவர்கள் தனிப்பட்ட முறையில் நான் அமீர் என் சொல்லுக்கு நீங்கள் கட்டுப் படவேண்டும் என்ற தொனி எப்போதுமே அவர்களிடம் பிரதிபலித்தது இல்லை. தங்கள் கை காசை செலவளித்தே எல்லா கருமங்களையும் முன்னெடுத்து செல்வார்கள்.
காயல்பட்டினத்தில் நடைபெற்ற மாபெரும் தப்லீக் இஜ்திமா அவர்களின் நெடுங்கால கனவு. படுத்த படுக்கையாக இருந்த போதும் அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனதிருப்தியும் ஆத்ம திருப்தியும் அடைந்தார்கள். தப்லீக் ஜமாஅத் பற்றிய விமர்சனங்களை அவர்கள் லட்சியம் செய்ததில்லை. கருத்து வேறுபாடு எங்குதான் இல்லை எதில்தான் இல்லை. உலகில் எல்லோரும் அல்லாஹ் ஒருவன் என்பதை ஒப்புக் கொள்ளவா செய்கிறார்கள். கடவுள் இல்லை இல்லவே இல்லை என்று சொல்பவர்களும் நிறையவே இருக்கிறார்கள். அதனால் எல்லாம் உண்மை ஊமை ஆகிவிடுமா... இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டு, பதில்கள் சொல்லி, "அமல் செய்கின்ற வேலையை பாரப்பா, இப்படி பேசிக் கொண்டிருக்குக்ம் நேரத்தில் 10 சலவாத் சொல்லு, 10 அல்ஹம்து லில்லாஹ் சொல்லு, 10 அல்லாஹு அக்பர் சொல்லு நன்மை கிடைக்கும். து ஆ க்கள் பாடமாக்கு, குர் ஆன் ஓது" என்றுதான் நமக்கு புத்திமதிகள் சொல்வார்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை பொருந்திக் கொள்வானாக. அவர்கள் குற்றங்களை மன்னித்து அருள்வானாக .அவர்கள் மண்ணறையை வெளிச்சமாக்கி விசாலமாக்கி வைப்பானாக. அவர்களுக்கு மேலான சொர்க்க வாழ்வை நசீபாக்கி வைப்பானாக.
அவர்கள் சந்ததிகள் மர்ஹூம் அவர்கள் விட்டு சென்ற பணிகளை தொடர்ந்து செய்ய அல்லாஹ் தவ்பீக் செய்வானாக.. தம்பி தாவூத் மற்றும் குடும்பத்தினருக்கு அல்லாஹ் நல்ல பொறுமையை கொடுத்தருள்வானாக. ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross