சிறப்புக் கட்டுரைகள்:120 கோடி கேட்கும் மறைந்த சவுதி மன்னரின் இரகசிய கிறிஸ்தவ மனைவி! (இறுதி பாகம்) [ஆக்கம் - எம்.எஸ்.ஷாஜஹான்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அனைத்து முஸ்லிம் முவ்மீன்களின் மானத்தையும் அல்லாஹ் காப்பாற்றுவானாக! posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[08 July 2014] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35853
பலபேர்களின் நியாயமான எதிர்ப்புக்கு இடையிலும் இரண்டாவது பாகத்தை வெளியிட்டு தங்களின்
உள்ள மகிழ்ச்சியை பூர்த்தி செய்த கட்டுரையாளருக்கும்,
அதை பிரசுரித்து தங்கள் தரத்தின் அடையாளத்தை காட்டிக்கொண்ட இந்த இணயதளத்திற்கும் எத்தனைபேர் எப்படி எழுதினாலும் அது யார் காதிலேயே ஊதிய சங்குக்குச் சமம்தான்!
கலிமா சொல்லிக்கொண்டு களிப்புற இஸ்லாத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் எந்த உண்மையான முஸ்லிமும் மர்ஹூமான ஒரு முஸ்லிமின் அந்தரங்க வாழ்கையை அவதூராக்கி ஆதாரமற்றவைகளை கோர்த்து அம்பலத்திற்கு கொண்டுவந்து அகம் மகிழ்ந்து கொண்டிருக்க மாட்டான்!.
ஆனால் இக்கட்டுரையோ ஒரு உண்மையான முஸ்லிமின் செயலுக்கு நேர்மாற்றமாக அமைந்து,அதற்க்கு இந்த
இணயதளத்தார்களும் எல்லையற்ற மகிழ்விலும்,பூரிப்பிலும் இக்கட்டுரையை பறைசாற்றுகிறார்கள் என்றால் புரிந்து கொள்ளவேண்டும் இவர்களெல்லாம் எப்படிப்பட்டவர்கள். முஸ்லிம்களின் பெயர்களைத் தாங்கித்திரியும்..........?
கட்டுரையாளர் தனது இரண்டாவது பாகத்திலாவது
அந்த சௌதி மன்னர் மணம் முடித்த திருமண சான்றிதலையோ, அல்லது அந்த வி.....மாதுவுக்கு தன் கைப்பட எழுதிய ஏதாவதொரு கடிதத்தின் புகைப்பட நகலையோ ஆதாரமாக தருவார் என்று எதிர்பார்த்த வர்களுக்கு ஏமாற்றமேதான் மிஞ்சியது! மாறாக இரண்டுபேர் புகைப்படத்தையும் இணைத்து இருவரும் இணைந்து இருப்பது போன்ற கவர்ச்சியான புகைப்படத்தைதான் பார்க்க முடிந்தது! ( இப்புகைபடம்போல் வெவ்வேறு நபர்களை இணைத்து எவரும் செய்யமுடியும். தேவை இருவரின் புகைப்படம் மட்டுமே )
இது எப்படி இருக்கிறதென்றால் கடற்க்கரை ஓரத்தில் ஒரு அழகிய மாளிகை.தோற்றத்தில் ஜொலித்துக்கொண்டு ஜோராக பார்ப்பவர்கள் பரவசமடையும் அளவிற்கு அதன் அமைப்புகள்,அனால் அதன் அருகே சென்று பார்த்து அடித்தளம் எந்த அளவிற்கு வலிமையானது என்று கேட்டால்.அடித்தளமே இல்லை அனால் அதன் அமைப்பைப் பாருங்கள் எவ்வளவு அற்ப்புதமாக வர்ணித்து வர்ணித்து விரசம், கிளுகிளுப்பு, காமஉணர்வு போன்ற கலவைகளால் கட்டப்பட்டிருக்கிறது. அதைப்பார்பீர்களா,அதை விட்டு விட்டு அடித்தளம் கேட்கிறீர்களே என்கின்ற மௌன பாஷை தான் பதிலாக கிடைத்திருக்கிறது. இதற்க்கு அத்தனைக்கும் ஆமாம்சாமி போட்டு அத்துமீறிய ஆனந்தத்தில் அவை அனைத்தையும் தங்கள் இணயதளத்தில் வெளியிட்டு உற்சாகத்தின் உச்சாணியில் ஊஞ்சலாடுகிறது தரமுடைய இணையத்தளம் எங்கள்தளம் தான் என்று கூறிக்கொள்ளும் இந்த இணயதளம்!
அந்த அழகு மாளிகையின் மிக அருகில் சென்று பார்த்தால் அத்தனையும் மணலால் எழுப்பப்பட்டு ஒரு மண் மாளிகை ஒரு கடல் அலை கால் உதைக்குக் கூட தாங்காத கட்டிடம்!
எனக்கு பலநாட்கள் ஒரு சந்தேகம் பல எழுத்தார்கள் தங்கள் எழுத்துக்கோர்வையால் அதை எடுத்துவைக்கும் வசீகரவார்த்தைகளால் பலரை விழ வைக்கக்காரணம் அவர்கள் சொந்த வாழ்க்கையில் நடந்த அத்தனைச் சம்பவங்களையும் அழகாக கோர்த்து அதை கட்டுரையாக மெருகூட்டி வெளிசந்தைக்கு விற்கிறார்கள் என்பதே!
அப்படி விற்கப்படும் கட்டுரைகளை அக்கட்டுரை
தரதிற்கேற்ப தங்கள் தரத்தையும் தாரகமந்திரச்செயளாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் இந்த இணயதளம் இதய மகிவுடன் வெளியிட்டு இரட்டிப்பு சந்தோஷம் அடைந்து கொண்டிருக்கும்பொழுது,
இவ்வையகமே வெகுண்டு கொதித்தெழுந்தாலும் அக்கொதிப்பின் வீரியம் கடலில் கலந்த கடுகளவு
கசபபுணர்வுக்குத்தான் சமம் இவர்களுக்கு!
அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும் அவனுடைய மார்க்கத்தை மருவிய மாந்தர்களின் மானத்தையும், மரியாதையையும் கவ்ருவத்தையும் ,கண்ணியத்தையும்!
என் மனதில் உள்ளதை கொட்டி விட்டேன்!அதை
அப்படியே வாசகர்களுக்கு கொட்டுவதும் வெட்டுவதும் உங்கள் நடுநிலை நெஞ்ச நீதிபதியின் நிலைப்பாட்டைப்
பொருத்துதான்! அல்லாஹ அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross