Re:... posted byVilack SMA (kayalpatnam)[09 July 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 35862
சுமார் 25 வருடங்களுக்குமுன் என நினைக்கிறேன் . என் மனதில் மிகவும் ஆழப்பதிந்த ஒரு TV நிகழ்ச்சி . திரைப்பட நடிகை லட்சுமி அவர்கள் ஒரு பெரியவருடன் பெசிக்கொண்டிருப்பதுபோன்ற நிகழ்ச்சி . 15 நிமிடம் சாதாரண பேச்சுதான் . பலதையும் பேசுவார்கள் . நமதூர் சங்கங்களில் மாலைவேளைகளில் பெரியவர்கள் பேசிக்கொண்டிருப்பார்களே அதுபோலத்தான் .
பேச்சின்போது இடையிடையே லட்சுமி அவர்கள் அந்த பெரியவரிடம் , 5 நபரின் பெயர்களுக்குண்டான எழுத்துக்களை ஒவ்வொரு எழுத்தாக மாற்றி மாற்றி சொல்வார் . ஒருமுறை ஒரு எழுத்துதான் சொல்வார் . பிறகு பேச்சு தொடரும் . அடுத்து ஒரு எழுத்தை சொல்வார் . பெயரின் 3 வது எழுத்து என்பார் . அடுத்த முறை இது 5 வது பெயரின் கடைசி எழுத்து என்பார் . இப்படியாக மாற்றி மாற்றி சொல்வார் . இறுதியில் 15 நிமிட பேச்சு முடிந்ததும் பெரியவர் 5 பெயர்களையும் எவ்வித பிழையும் இன்றி சொன்னார் . மிகவும் ஆச்சர்யம் . இதற்கிடையே பேசிக்கொண்டிருக்கும்போதே பெரியவர் கையால் எதையோ செய்துகொண்டிருந்தார் . அதையும் கச்சிதமாக முடித்தார் .
பேட்டிகண்ட லட்சுமி அவர்கள் ஆச்சரியத்துடன் வியப்புடனும் கேட்டார் . என்ன பெரியவரே எப்படி இதெல்லாம் உங்களால் முடிகிறது ?
மனம் ஒருமைப்பட வேண்டும் . கெட்ட செயல்களை பார்ப்பது , செய்வது , பேசுவது இவைகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் . கெட்ட எண்ணங்கள் குப்பைகளுக்கு சமம் . அவற்றை மூலையில் ஏற்றுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் . மன ஒருமைப்பாட்டுடன் நல்ல எண்ணங்களும் சேர்ந்தால் நான் செய்த இந்த காரியம் எல்லோருக்கும் வரும் என்றார் .
நண்பர் அவர்களின் கட்டுரை அனைத்தையுமே விரும்பி படிப்பவன் நான் . பயனுள்ள செய்திகள் ஏகப்பட்டது இருக்கும் .
அல்லாஹ்வை வணங்குவது , மனம் ஒருமைப்படுவது இந்த ரமலான் மாதத்தில் ஸ்பெசல் என்றாலும் எல்லா காலத்திலும் இது தொடர வேண்டும் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross