வேலை விசியதிலும் சரி - பிற விசியங்களிலும் சரி அவர் எந்த சமுதாயத்தவனாக இர்ந்தாலும் சரி - யாருக்கும் அநீதி ஏற்பட்டு விட கூடாது...! அது எனது மாற்று கருத்துடைய எவராக இருந்தாலும் கூட...! நீதி வெல்ல வேண்டும்.. posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[10 July 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 35875
நான் அறிந்த சில தகவல்...!
சமீபத்தில் சில மாதங்களுக்கு முன் நகராட்சியின் ஆணையர் அவர்கள் புதியதாக பொறுப்பேற்ற சமயம் இந்நகர்மன்றத்தின் அணைத்து ஊழியர்களின் வேலை சம்பந்தமான நடப்புகள், விபரங்கள், தெளிவுகள் இல்லாமல் குழம்பி போய் இருந்து அதை முறைபடுத்த அவரின் மூத்த அதிகாரியை அணுகி காலவதியான ஒப்பந்த பணியாளர்களின் பணி நீட்டிப்பை வழங்குமாறும் மேலும் பணி நீட்டிப்பு குறித்து சரியான அறிவரை - தெளிவு வழங்குமாறும் கூறி நகராட்சியின் மூத்த அதிகாரியான (RDMA) நகராட்சியின் மண்டல திருநெல்வேலி இயக்குனரிடம் தெளிவான தகவல் தருமாறு கேட்டுள்ளார் போல் தெரிகிறது -
புதியதாக பொறுப்பேற்றுள்ள ஆணையரின் தகவலுக்கு நகராட்சியின் மூத்த அதிகாரியான (RDMA - நகராட்சியின் மண்டல திருநெல்வேலி) இயக்குனர் கீழ்க்கண்ட விபரத்தினை அளித்துள்ளார் - கேட்டுள்ளார் போல தெரிகிறது.
1996 ஆம் ஆண்டு இறுதிக்கு முன்னர் நியமனம் செய்யப்பட்ட தினக்கூலி, ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த அணைத்து பணியாளர்களையும் வரன்முறைபடுத்தி காலமுறை ஊதியத்திற்கு கொண்டு வந்து உத்திரவுவிடப்பட்ட அரசாணையில் தெளிவாக இனிவரும் காலங்களில் எந்த காரணம் கொண்டும் பணியாளர்கள் தற்காலிக அடிப்படையிலோ, ஒப்பந்த அடிப்படையிலோ நியமனம் செய்ய கூடாது என்று உத்திரவுவிடப்பட்டுள்ள நிலையில் அதற்க்கு பின்னர் எந்த அடிப்படையில் காயல்பட்டினம் நகராட்சியில் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டனர் என்பதற்க்கான விபரங்களையும் தகவலையும் அளிக்கமாறு கேட்டுள்ளதாக தெரிகிறது..
RDMA இயக்குனர் கோரிய தகவலையோ, விபரதையோ முறையான பணி நியமன ஆணையயோ, கோப்புகளோ நகராட்சியின் சார்பில் வழங்க - அளிக்க எந்த ஆதரமுமும் நகராட்சியில் இல்லை என தெரிகிறது -
அப்படி எந்த ஆவணங்களும் ஆணைகளும் நகராட்சியில் இல்லாது இருக்கும் பட்சத்தில் மேலும் இந்த ஒப்பந்த பணியாளர்களை நகராட்சியில் பணி அமர்த்தி அவர்களுக்குரிய மாத ஊதியத்தை நகராட்சி வழங்கி வரும் போது வழங்கிய அந்த ஊதியத்தின் மொத்த செலவையும் நகராட்சிகளின் ( RDMA திருநெல்வேலி - CMA சென்னை) தலைமையிலான ஆடிட்டிங் டீம் காயல்பட்டினம் நகராட்சியின் கணக்குகளை ஆடிட்டிங் செய்யும் போது இந்த ஒப்பந்த ஊழியர்களின் செலவு தனியாக பிரித்து அதை அன்றைய வருடத்தில் பொறுப்பில் இருந்த ஆணையரின் தலையில் சுமத்தும்படி அதாவது ஆணையரிடம் வசூல் செய்யும்படி குறிப்பு எழுதி மேலிடத்திற்கு நகல் அனுப்பி வைக்கப்படும் போல தெரிகிறது -
கடந்த 2006 - 2011 நகர்மன்றத்தின் போது தற்போது பணி நீக்கம் செய்யப்பட்ட இவர்களின் பணி நியமனம் அன்று எவ்வாறு எந்த முறைகளின், ஆவணங்களின், ஆணைகளின், உத்தரவுகளின், சிபாரிசுகளின் அடிபடைக்கான ஆதாரம் (சட்டதிற்கு உட்பட்டு) நகராட்சியில் எதுவுமில்லை என தெரிகிறது..
இந்த மாதிரி பிரச்சனைகளுக்கு நாளை வரும் காலங்களில் ஆணையருக்கு பதவி உயர்வு மற்றும் அவரின் ஓய்வின் போது செட்டில்மென்ட் பிரச்னை இவைகளை தவிர்பதற்காக முன் நடவடிக்கை எடுத்து இருக்கார் போல தெரிகிறது..
அந்த அந்த பதவியில் இருந்தால் தான் அதற்க்கான வளைவு - அதன் விதிமுறைகள் நமக்கு விளங்கும்..
அப்படி சட்டத்திற்கு உட்பட்டு ஏதாவது ஆதாரம் ஒப்பந்த ஊழியர்களிடம் இருக்குமானால் நகர்மன்ற தலைவியாலும் ஆணையாராலும் தான் பணி நீக்கம் செய்யப்பட்டுவிட்டோம் என்று கருதும், நினைக்கும் பணி நீக்கம் செய்யப்பட்ட இந்த ஒப்பந்த ஊழியர்கள் பணி நியமன அரசு தரப்பு ஆணை அல்லது இது சம்பந்தமான ஆதாரத்தை வைத்து நீதி வேண்டி நீதி மன்றதையோ அல்லது ஆடிட்டிங் செய்யவரும் நகராட்சிகளின் தலைமை அலுவலகத்தையோ அணுகி தனது தரப்பு நியாயத்தை நிலைநிறுத்த அணுகுவது வரவேற்க கூடியது..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross