பூனைக்கு மணி கட்டுவது யார்? posted bymackie noohuthambi (chennai)[12 July 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 35893
மிக்க ரசனையான கட்டுரை மட்டுமல்ல கண் திறக்கும் கட்டுரை.
எல்லாவற்றுக்கும் நம் முன்னோர்களை ஆதாரம் காட்டும் நாம் இந்த வெண் கஞ்சி விஷயத்தில் அவர்களுக்கு மாறு செய்கிறோம்.
வெள்ளை கஞ்சி போட்ட காலத்தில் பொருளாதாரத்தில் கொடி கட்டி பறந்தவர்கள் இல்லாமல் இல்லை. "பணம் என்னடா பணம் குணம் ஒன்றுதான் நிரந்தரம்" என்று அவர்கள் நினைத்தார்கள். பெருமைக்காக அவர்கள் கஞ்சி போட்டதில்லை. ஒரு நோன்பாளிக்கு நோன்பு திறக்க ஒரு பேரீச்சம்பழத்தை அளித்தாலும் அதற்கு என்ன நன்மை என்று ரசூலுல்லாஹ் சொன்னதை நினைத்து அவர்கள் கஞ்சி போட்டார்கள்.
வெள்ளை கஞ்சியும் சும்மா போடவில்லை. பகலெல்லாம் நோன்பிருந்து வயிறு ஒட்டி இருப்பவர்கள் வாய்வு கலைவதற்காக வெள்ளை பூடு அதில் அதிகம் கலப்பார்கள். நாவு ருசிக்காக துவையல் சேர்ப்பார்கள்.
புது பணக்காரர்கள் ஒரு சிலர்தான் இந்த கஞ்சிக்கு உலை வைத்தார்கள். காய்கறி கஞ்சி என்று லேசாக மாறி, பின்பு கறி கஞ்சி என்று ஆனது. நாளடைவில் அது ஒரு வியாதியாக மாறி, பின்னர் அதுவே சமூக அந்தஸ்தாக மாறி விட்டது.
HISTORY REPEATS என்று ஆங்கிலத்தில் சொல்வது போல் மீண்டும் வெள்ளை கஞ்சி காலம் கனிந்து வருகிறது. நாங்கள் மொகுதூம் பள்ளியில் கஞ்சி போடுவோம். வெள்ளை கஞ்சி என்றால் OK என்போம். குருவித்துறை பள்ளியிலும் போட்டோம். எல்லா இடங்களிலும் எங்கள் ஓட்டும் ஒகேயும் வெள்ளை கஞ்சிக்குதான்.
இப்போது கூடுதலாக ஒரு பழக்கம் வடை கட்லெட் கேக் என்று நிறைய நோன்பு திறக்க கஞ்சியுடன் வலம் வருகிறது. நோன்பு திறக்கும்போதும் சஹர் செய்யும்போதும் சம நிலையை கையாளும் பழக்கம் போய்விட்டது. வயிறு முட்ட சாப்பிடுவது வழக்கமாகி விட்டது.
இதற்கு நபி அவர்களின் அங்கீகாரம் இல்லை. நபிகள் நாயகமும் சஹாபாக்களும் எப்படி தங்கள் இப்தாரையும் சஹ்ரையும் அமைத்துக் கொண்டார்கள் என்ற ஹதீத்கள் ஏராளம் இருக்கிறது. இதை நாம் சிந்தித்து நமது நிலைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.
இன்னொரு புதிய இப்தார் கலாசாரம் முளை விட்டிருக்கிறது. அந்நிய மதத்து சகோதரர்களை, தலைவர்களை அழைத்து அவர்கள் தலையில் ஒரு தொப்பியை போட்டு, "மதங்களை கடந்து மனங்களால் இணைவோம் " என்று அதற்கு ஒரு புதிய கோஷமும் சுலோகமும் போட்டு அவர்களை அழைத்து நோன்பு கஞ்சி கொடுத்து உபசரிக்கிறோம்.
காலை 4 மணிமுதல் மாலை 6.45 மணி வரை ஒரு முடக்கு தண்ணீர் கூட குடிக்காமால் இருப்பவர்கள், நோன்பே நோற்காதவர்களை அழைத்து நோன்பு துறக்கச் செய்கிறோம். இந்த நிலையை மாற்றுவதற்கு வழி என்ன? வெள்ளை கஞ்சி கலாசாரம் திரும்ப வருவது மகிழ்ச்சி தருகிறது. அதே நேரம் இந்த புதிய கலாச்சர்ரங்கள் பெருகி வருவது அதிர்ச்சி தருகிறது...
.பூனைக்கு மணி கட்டுவது யார்?
கட்டுரை ஆசிரியர்கள் போன்ற சமூக ஆர்வலர்கள் நினைத்தால் இந்த கலாச்சாரங்களை ஒழிக்க முடியும். ஆட்சிகளை மாற்றுவதற்கும் அவலங்களை வெளிக் கொணர்வதற்கும் ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கும் இந்த கால கட்டத்தில் நல்ல சிந்தனைகள் துளிர்த்திருப்பது பாராட்டுக்கு உரியது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது.
உன்னால் முடியும் தம்பி.
தடம் பார்த்து நடப்பவர்கள் மனிதர்கள். தடம் பதித்து நடப்பவர்கள் மாமனிதர்கள்.
நீங்கள் யாராக இருக்க ஆசைப் படுகிறீர்களோ அப்படியே ஆவீர்கள்.
IF YOU THINK YOU CAN DO, YOU ARE RIGHT. IF YOU THINK YOU CANNOT DO, YOU ARE RIGHT. GO AHEAD.
நோன்பு நோற்பது மட்டுமல்ல, நோன்பு திறப்பது மட்டுமல்ல நோன்பு காலத்தில் செய்ய வேண்டிய வணக்கம். அதை நபிகள் நாயகம் சொன்ன வழியில் அமைத்துக் கொண்டால்தான் அதற்கான முழு பயனும் நன்மையும் கிடைக்கும். அத்தகைய நோன்பு நோற்றவர்களாக நம் எல்லோரையும் அல்லாஹ் ஆக்கி வைப்பானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross