செய்தி: ரமழான் 1435: இஃப்தார் - நோன்பு துறப்பு ஒன்றுகூடலுடன் நடந்தேறியது காவாலங்கா பொதுக்குழு! காயலர்கள் திரளாகப் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...கனத்த இதயத்துடன்..... posted bymackie noohuthambi (chennai)[16 July 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 35951
காய்ந்து சிவந்தது சூரிய காந்தி - கனலில் தோய்ந்து சிவந்தது காய்ச்சிய தங்கம் - ஆய்ந்து சிவந்தது அறிஞர் தம் நெஞ்சம் - தினம் ஈந்து சிவந்தன இலங்கை முஸ்லிம்கள் கரங்கள்.
இந்த நிலைதான் அந்த நாட்டில் நாம் பார்த்து வந்திருக்கிறோம். எங்களை எல்லாம் வாழ வைத்த சுந்தர தீவு - சேரன் தீவு - அதுவே பின்னர் சரண்தீப் serendib என்று சரித்திர காலத்தில் அழைக்கப்பட்டது. சமீப காலத்தில் இந்த கொடுக்கும் கரங்களுக்கு சொந்தக்காரர்களான இலங்கை முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் துயரங்களை தொலைக் காட்சிகளிலும் நாள் இதழ்களிலும் பார்த்தபோது அடி வயிற்றில் அமிலம் சுரந்தது.
"அஹிம்சையை போதித்த புத்த மதத்தவர்களும் சகோதரத்துவம் போதிக்கும் இஸ்லாம் மதத்தவர்களும் மோதிக் கொள்வதை கண்டு மனம் கனக்கிறது. வேறெந்த மதத்தினரால் இவர்களை சமரசம் செய்து வைக்க இயலும்" என்று புதிய தலைமுறை இதழில் ஒருவர் தனது கவலையை பதிவு செய்திருக்கிறார். உண்மைதான்.
சிங்களவர்களுடன் நான் பழகிய இளமை பருவம் எனக்கு நினைவுக்கு வருகிறது. முதலாளி என்றுதான் அவர்கள் நம்மை கூப்பிடுவார்கள். சிங்கள பெருநாளில் அவர்கள் பட்சணங்கள் நம் வீட்டுக்கு வருவதும் நமது பெருநாள்களில் நமது பண்டங்கள் அவர்கள் வீட்டுக்கு செல்வதும் இப்போதும் கூட நடந்து வரும் அன்றாட நிகழ்சிகள்.
இந்த கால கட்டத்தில் நடைபெற்றுள்ள வன்முறைகள், உயிர் இழப்புக்கள், வர்த்தக நிறுவனங்கள், இறை இல்லங்கள், இனிய இல்லங்கள் எல்லாம் தீக்கிரையாகி பல கோடி ரூபாய்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ள செய்திகள் உலக நாடுகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றன. இங்கே நடைபெறுகின்ற இப்தார் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருப்பவர்கள் முகங்களில் கூட புன்னகை ரேகையை பார்க்க முடியவில்லை. ஒரு சோகமான தருணத்தில் இந்த ரமலான் வந்துள்ளது.
அல்லாஹ் இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு நிம்மதியையும் சந்தோஷத்தையும் மீண்டும் அளிக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம். அவர்களுக்காக காவா லங்கா உதவிக் கரம் நீட்டிய செய்தியும் படித்தேன். எல்லா காயல் நல மன்றங்களுக்கும் காவா லங்காவுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. மற்ற மன்றங்கள் நமதூர் மக்களுக்கு மட்டுமே உதவ வியூகம் வகுக்க வேண்டியுள்ளது. ஆனால் காவா லங்கா நமதூர் மக்களுக்கும் இலங்கை மக்களுக்கும் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல சகோதர மதத்தினருக்கும் உதவிகள் செய்து வருகிறார்கள். அந்த மண்ணின் வாசனை அது. நடந்தவைகள் ஒரு கெட்ட கனவாக இருக்கவும் இனிமேல் இந்த துயர சம்பவங்கள் நடவாதிருக்கவும் எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக.
கோடை வரும் வெய்யில் வரும் கோடைக்கு பின்னே மழையும் வரும் - கோபம் வரும் வேகம் வரும் - கோபத்தின் பின்னே குணமும் வரும். இந்த நிலையும் மாறும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross