செய்தி: டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் தந்தை ஹாஜி கே.வி.ஷாஹுல் ஹமீத் காலமானார்! இன்றிரவு சென்னை இராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...பெரியப்பாவை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக ! posted byK.V.A.T. HABIB MOHAMED (QATAR)[16 July 2014] IP: 209.*.*.* United States | Comment Reference Number: 35954
எங்கள் பெரிய வாப்பா அவர்களின் வ ஃ பாத்து செய்து அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தோம்.
எங்கள் தகப்பனார்(மர்ஹூம் )கே .வீ.அஹமது தாஹிர் அவர்களுக்கு ஒரு தந்தையாகவே இருந்து , குடும்பத்தை வழி நடத்தி சென்றவர்கள். அவர்களிடமிருந்து நிறைய பேர் , நல்ல பழக்க வழக்கங்களை கற்றிருக்கிறார்கள் . கடமை..நேரம் தவறாமை...கட்டுகோப்பான குடும்ப வாழ்வு ..சிக்கனம் ...வாழ்வில் படித்து முன்னேறவேண்டிய விதி முறைகள் போன்றனவற்றை அவர்களிடமிருந்தே அறிந்துக்கொள்ளலாம். அந்த அளவிற்கு தன் வாழ்வை செம்மை படுத்திக்கொண்டு வாழ்ந்தவர்கள்.
அவர்களை சென்ற வருடம் சந்தித்த போது , உடல் நலம் குன்றிய அந்த சூழ்நிலையிலும் , எங்களின் மீது அக்கறையோடு குடும்ப சூழ்நிலைகள் பற்றி அளவளாவி , அறிவுரையும் கூறி உச்சி முகர்ந்து து ஆ செய்து அனுப்பி வைத்தார்கள். இன்றளவும் அவர்களை எங்களின் தகப்பனாரின் தந்தையாகவே கருதி வருகிறோம். அந்த அளவுக்கு எங்கள் மீது தனிப்பெரும் பாசம் கொண்டவர்கள். அவர்களின் இடத்தை யாராலும் நிரப்ப இயலாது. இப்படி அவர்களின் நற்செயல்களை நினைவு கூர்ந்து கொண்டே இருக்கலாம்.
அல்லாஹ்வின் நாட்டப்படி மறுவுலக அடைந்த எங்கள் பெரிய வாப்பா மர்ஹூம் அவர்களை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக .பாவப் பிழைகளை மன்னித்தருள் வானாக . கப்ரை பிரகாசமாக்கி வைப்பானாக. மறுமையில் மேலான சுவன பதி அடையச் செய்வானாக ....ஆமீன்.
பெரிய வாப்பா மர்ஹூம் அவர்களை பிரிந்த இந்த நேரத்தில் , எங்கள் குடும்பத்தார் அனைவர்க்கும் அல்லாஹ் , சப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்குவானாக . அனைவரும் சப்ர் செய்யுமாறு அன்போடு வேண்டுகிறோம். அனைவருக்கும் எங்கள் சலாத்தையும் (அஸ்ஸலாமு அலைக்கும்) சமர்பிக்கிறோம்.
வருத்தத்துடன் ,
தம்பி மனைவி ,
மக்கள் K.V.A.T.கபீர்
K.V.A.T.ஹபீப்
K.V.A.T.முத்து ஹாஜரா
மருமக்கள் ,பேரன்மார்கள் ,பேத்திமார்கள்
K.V.A.T. குடும்பத்தினர்
குறுக்குத்தெரு
காயல் பட்டணம் மற்றும்
கத்தார்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross