செய்தி: டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் தந்தை ஹாஜி கே.வி.ஷாஹுல் ஹமீத் காலமானார்! இன்றிரவு சென்னை இராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...தக்கார் தகவிலார் எனபது... posted bymackie noohuthambi (chennai)[16 July 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 35965
தக்கார் தகவிலார் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும் என்று வள்ளுவம் கூறுகிறது. அது ஓரளவு உண்மைதான் என்பது மருத்துவர் ஹபீப் முஹம்மது அவர்களின் தந்தையின் மறைவு மூலம் தெரிகிறது.
எங்கள் தந்தைக்கு மிகவும் உவப்பானவர்கள். சுறுசுறுப்புக்கு ஒரு வயது இருக்கிறது என்பதை பொய்ப்பிதவர்கள்.அவர்கள் விட்டுசென்ற மழலை செல்வங்கள், மானுட வசந்தம் ஹபீப் முஹம்மது அவர்களும் ஹாபிழ் முஹம்மது அப்துல் காதர் அவர்களும் எனக்கு நண்பர்கள். பழகுவதற்கு இனிமையானவர்கள்.
மற்ற பிள்ளைகள எனக்கு பழக்கம் இல்லை என்றாலும் இவர்கள் இருவரை வைத்தே மற்றவர்கள் குணாதிசயங்களை அறிந்து கொள்ள லாம் .
கல்வி தாகம் அதிகமாக இல்லாத காலத்தில் கல்வியின் மகிமையை போதித்த குடும்பம் KV குடும்பம். 2014இல் நின்று பார்த்தால் இவர்கள் மகிமை விளங்காது. 1950 களுக்குள் புகுந்தால் தெரியும் இவர்களின் கல்வி, தொழில் ஈடுபாடுகள்.
கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் ஒரு சிறு கடையில் ஒரு சிறு உருவம் இருக்கும்.என் தந்தை அவர்களை அறிமுக படுத்தினார்கள். பின்பு மருத்துவர் ஹபீப் முஹம்மது அவர்கள் பாளையம்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் எனக்கு விடுதி நண்பர். ஹாபிழ் முஹம்மது அப்துல் காதர் தம்மாம் காயல் நலமன்றத்தின் பொருளாளர்- நான் செயலாளர். இது எங்கள் நட்பின் அடையாளங்கள்.
என்னதான் வயதாகி விட்டாலும் நம்மை சீராட்டி பாராட்டி வளர்த்து வாலிபமாக்கி நம்மை சபையில் ஒரு உயர்ந்த மனிதனாக நடமாட வைத்த தந்தை நம்மை விட்டு பிரிந்து விட்டால் அந்த வெற்றிடத்தை யார் தான் நிரப்ப முடியும்?
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை பொருந்திக் கொள்வானாக!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross