பாசமுள்ள மச்சி... posted byS.K.Salih (Kayalpatnam)[18 July 2014] IP: 59.*.*.* India | Comment Reference Number: 36002
2006, 2007 ஆண்டுகளில் - ரமழான் மாதத்தின் அனைத்து நாட்களிலும் உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசை வாயிலாக இஸ்லாமிய மார்க்கம் தொடர்பான கேள்வி - பதில் நிகழ்ச்சியை நடத்தி வந்தேன்.
பதிலை வைத்துக்கொண்டு தொலைபேசி இணைப்பு கிடைக்காமல் பலர் காத்துக் கொண்டிருந்த அவ்வேளையில், இவர்களுக்கோ - முயற்சித்தவுடன் இணைப்பு கிடைக்கும். கேள்விக்கு விடையை நான் கேட்க, “உன்கிட்ட இந்த நிகழ்ச்சியில பேசத்தான் நான் ட்ரை பண்ணினேன்... பதில்லாம் தெரியாது வாப்பா... நீயே எனக்காக சொல்லி, பரிசையும் என் வீட்டுக்குக் கொண்டு வந்துடு...” என்று ஏதோ வீட்டிற்குள் பேசிக்கொள்வது போல பேசினார்கள்.
அதன் பிறகு என்னைக் கண்டபோதெல்லாம், “நீ இந்த கேள்விய கேட்டியே...? அந்த கேள்விய கேட்டியே...?” என கேள்வி கேட்ட என்னிடமே அவர்கள் கேட்பார்கள். கள்ளம் கபடமில்லாத - பாசக்கார மச்சி இவர்கள்.
இரண்டு தலைமுறை தாண்டிவிட்டால், உறவுகள் மறைந்துவிடும் இக்காலகட்டத்திலும், நெருங்கிய - தூரத்து உறவினர்களையெல்லாம் தேடித் தேடிச் சென்று பேசுவார்கள்.
சுயநலமிக்க இவ்வுலகில், எதைப் பற்றியும் கவலைப்படாமல் உறவுகளைப் புதுப்பித்த அந்த உத்தமி இன்று நம்மை விட்டும் பிரிந்திருக்கிறார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
கருணையுள்ள அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் அனைத்துப் பிழைகளையும் மன்னித்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தில் நல்லோருடன் இணைந்திருக்கச் செய்வானாக...
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - மச்சான் ‘கவிமகன்’ உள்ளிட்ட - மர்ஹூமா அவர்களின் குடும்பத்தார் யாவருக்கும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன்
அனைவருக்கும் எனது அகங்கனிந்த அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...
துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross