செய்தி: ரமழான் 1435: காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் சார்பில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி! நகரப் பிரமுகர்கள் உட்பட திரளானோர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் )[20 July 2014] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36030
மாஷா அல்லாஹ்.
அனைத்து சகோதரர்களையும் ஒன்றாக பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி.
காக்கும் கரங்களின் நற்பணிகளை வல்ல ரஹ்மான் அங்கீகரிப்பானாக. உங்களின் மக்கள் சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள்.
சென்ற கூட்டத்தில் :-
தற்காலத்தில் இரத்த தானம் செய்யும் தன்னார்வலர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருவதால், இரத்த தானம் செய்ய விரும்பும் தன்னார்வலர்களை இனங்கண்டு, அமைப்பின் அங்கத்தினராக்க முயற்சிகளை மேற்கொள்வதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது. (C & P )
ஆனால், WHO ( World Health Organisation) வின் அறிக்கையில் இரத்தம் தானம் செய்யும் தன்னார்வலர்களின் எண்ணிக்கை கணிசமாக உலக அளவில் அதிகரித்துள்ளது என்று தானே குறிப்பிட்டுள்ளது.
இந்த கூட்டத்தில்- காயல்பட்டினத்தில், இரத்தம் தானம் செய்யும் தன்னார்வலர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று கூறியுள்ளீர்கள். புரியல்லே..!! நீங்க சொன்ன சரியாக இருக்கலாம். காரணம் களத்தில் இருப்பவர்கள் நீங்கள் தானே..
நம் ஊரில் த.மு.மு.க, TNTJ , பல நல அமைப்புகள் இரத்த தான சேவையில் தங்களை அர்ப்பணித்து, உங்களுடன் பயணித்து வருகிறார்கள். அவர்களையும் ஒருங்கினைத்து கூட்டிக் கழித்து பார்த்தால் கணக்கு சரியாக வரும்.
சென்ற விடுமுறையில் ஒரு அவசர தேவைக்கு இரத்தம் தேவை என்று த.மு.மு.க சகோதரர் முர்சித் அவர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபரம் சொல்லிவிட்டு, அவரை நேரில் பார்க்க சென்றேன்.
நேரில் சென்று விபரம் கேட்கவும், ஜியா காக்கா.. 4 சகோதரர்கள் ஹாஸ்பிடல் சென்று விட்டார்கள் என்றார்.
ஒரு 20 நிமிட நேரத்தில், மின்னல் வேகத்தில் இந்த அற்புத நிகழ்வு நடக்கின்றது என்றால்.. விழிப்புணர்வு இல்லாமையா..?
அது சரிங்க, ஏன் மருத்துவர்கள் இரத்த தானம் செய்வது இல்லை. ஒரு சிலரை தவிர.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross