செய்தி: அபூதபீ அவ்காஃபுடன் இணைந்து இந்திய சமூக கலாச்சார மையம் நடத்திய திருக்குர்ஆன் மனனப் போட்டியில் காயலர் முதலிடம் பெற்று சாதனை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...மக்கி என்ற மூன்றெழுத்து posted bymackie noohuthambi (kayalpatnam)[23 July 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 36090
மக்கி என்ற மூன்று எழுத்துக்கு அப்படி என்ன இஸ்ஸத்? கேள்விக்கு விடை மிக சுலபமானது. அல்லாஹ்வின் திருமறை வசனங்கள் பல மக்காவில் அருளப்பட்டதால் அவற்றை மக்கி என்று அழைக்கிறோம். அல்லாஹ்வின் திரு தூதர் நபிகள் நாயகம் அவர்கள் மக்காவில் பிறந்ததால் அவர்களை மக்கி என்று அழைக்கிறோம். ஷாதுலியா தரீகாவின் தலைவர் சம்சுதீன் மக்கி என்று பிரபலமாகி இருக்கிறார்கள்.
காயல்பட்டினத்தில் இருந்து ஒரு ஆறு வயது சிறுவன் தன தந்தையுடன் மக்கா சென்றபோது அங்கே சம்சம் zamzam கிணற்றிலே கால் தவறி விழுந்து பின்னர் வெளியே வந்த போது அவனது தந்தை அவனை மக்கி என்று அழைத்து அன்றிலிருந்து அவன் மக்கி என்றே ஊரில் அறியப்பட்டான் எனபது செவிவழி செய்தி. அந்த சிறுவன்தான் பிற்காலத்தில் 60 ஆண்டுகாலம் இலங்கையின் மூலை முடுக்குகளிலெல்லாம் "மக்கி ஆலிம்" என்று பெயர் பெற்று மக்கள் உள்ளங்களை கவர்ந்து வலம் வந்தார்கள்.
எங்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்து வாழும் எங்கள் அன்பு தந்தை மக்கி ஆலிம் அவர்களுக்கு ஒரு பேரவா. வீட்டுக்கு ஒரு ஹாபில் உருவாக வேண்டும் என்ற அந்த ஆசை கொழுந்துவிட்டு அவர்கள் உள்ளத்திலே எரிந்த போது, அதை நடைமுறை படுத்த தன் மக்களை ஹாபில்களாக்கினார்கள்.தன தந்தையும் ஹாபில். தானும் ஒரு ஹாபில் . தன் சகோதரர் இலங்கையிலே இளம் வயதில் வபாத்தானபோது அவரும் ஒரு ஹாபிலாகவே இருந்தார்கள். அவர்கள் மகளுக்கு தேர்ந்தெடுத்த மருமகனும் ஒரு ஹாபில். சம்பந்தி ஒரு ஹாபில். பேரன்கள் பேத்திமார்கள் , பூட்டன் எல்லோரும் வீட்டுக்கு ஒரு ஹாபில் என்ற அவர்கள் கனவை நனவாக்கியபோது மக்கி ஆலிம் அவர்கள் பெற்ற மகிழ்ச்சிக்கு அளவில்லை.
கண்பட்டு விடுமோ என்று அவர்கள் பயந்து என்னை மட்டும் அந்த பட்டியலில் இருந்து எட்டி வைத்தார்கள் போலும்.
மாஷா அல்லாஹ் அவர்கள் பேரன் இஸ்ஸத் மக்கி அவர்கள் தமிழகத்தின் சார்பாக அமீரகத்தில் திருமறை மனன போட்டியில் கலந்து கொண்டு வெற்றிக் கனியை பறித்திருப்பது மனதுக்கு இன்பம் தரும் செய்தி. ஹாமிதிய்யா மார்க்க கல்வி நிறுவனத்தில் பயின்ற மாணவர், சேவை செம்மல் - நூருல் ஹக் நுஸ்கி அவர்கள் சிற்பியாக இருந்து அவரை செதுக்கி எடுத்தார்கள். மாணவர் அணி படை தளபதியாக அவரை இந்த ஊரின் தெருக்களில் வீறு நடைபோட்டு செல்வதை பார்த்து மனம் மகிழ்ந்தார்கள்.. அவருக்கு பாடம் கற்றுக் கொடுத்த நல்லாசிரியர்கள் அவரை இந்த உயர் நிலைக்கு உருவாக்கினார்கள். அபூ தாபி நண்பர்கள் இவரை அங்கு அறிமுகப் படுத்தினார்கள்.எல்லோருக்கும் எங்கள் மக்கி ஆலிம் குடும்பம் சார்பாக எங்கள் இதயம் கனிந்த நன்றியை காணிக்கை ஆக்குகிறோம். ஜஸாக் குமுல்லாஹு க்ஹைரா சுக்ரன் ஜஸீலா. .
ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக்கேட்ட தாய் - மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என் நோற்றான் கொல் எனும் சொல் என்ற தமிழ் வாழ்த்துக்களும் இஸ்ஸத் மக்கி அவர்களுக்கு பெருமை சேர்க்கிறது. இந்த ஊருக்கும் பெருமை சேர்க்கிறது.
இவர் மூலம் ஹாபில்களின் relay race ஆரம்பமாகி இருக்கிறது. அந்த batton னை வாங்கிக்கொண்டு பின் தொடர்பவர்கள் புறப்படுங்கள் ஒரு புதிய விடியலை நோக்கி.
மதரசாக்கள் அழைக்கின்றன, "தாருங்கள் உங்கள் பிள்ளைகளை, நாங்கள் அவர்களை ஹாபில்களாக்கி உங்களிடம் திருப்பித் தருகிறோம்" என்ற அழைப்பு மணி ஹாமிதிய்யாவிலிருந்தும் ஜாவியாவிலிருந்தும் மஹ்லராவிலிருந்தும் அஸ்ஹரில் இருந்தும் ஊரின் நாலா பக்கங்களில் இருந்தும் ஒலிக்கிறது.வீட்டுக்கு ஒரு ஹாபில் என்ற எங்கள் தந்தையின் கனவை நனவாக்குவோம் வாருங்கள். அல்லாஹ்வின் ரஹ்மத் இந்த நல்ல நாளில் நம் அனைவரையும் அரவணைத்துக் கொள்ளட்டும். ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross